பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/663

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனந்தம்2

2,6). அனந்தகோடி விண்ணும் மண்ணும் வேண்டும் (கம்பரா. 6, 15, 20). அனந்தமாம் இயல்பிற்றாகி அறிதலுக்கு அரியதாகி (யசோதர.50). வாரிதனைச் சென்று அனந்தவாரிகலந்தாற்போல் (பாரதவெண்.396). அனந்தானந்தத்து அகம்நெகிழ (கருவைப்பதிற். அந். 1). பேர் அனந்தம் பேசி மறை அனந்தம் சொலும் (தாயுமா. 1, 2). பரவியோமம்

...

விளை.

பு. புராணவர.

...

அனந்தம் அசலம் (திருவருட்பா 1960, 9). 2. எண் ணற்றது, அளவற்றது, மிகுதி. அல் பகல் ஆக, அனந்த சதகோடி கற்பக சாதி கதிர் கதுவ (குலோத். உலா 53). நங்களை வந்து கூடி நடந்தன அனந்தம் அன்றோ (யசோதர. 38). இக்கதையும் அனந்தமாம் பேதமாகும் (கந்தபு. அவையடக். 15). விடைமேல் ஊரும் அந்தரநாடவன் உறைபதி அனந்தம் (திரு 9). அது சிவலோகமாம் அதன் பெருமைகள் அனந்தம் (ஆச்சாபு. புராண. 134). சிவத்துரோகம் உரைத்தி சாந்தியதற்கென ஈடனந் தம் இயற்றினுந் தொலைவில்லை (ஞான. உபதேசகா. அனந்தம் வார்த்தை சொல்லியும் (இராமநா. 1,27). பிறகு நடந்த உபசாரங்களும் அனந்தம் (பிரதாப. ப. 272). 3. ஒரு பேரெண்ணைக் குறிக்கும் சொல். ஐயிரு நூறும் அல்ல அனந்தமாம் முகங்கள் அம்மா (கம்பரா. 6, 30, 218). 4. ஆகாயம். அண் டம் அனந்தம் ஆகாயமாமே (சூடா. நி. 1, 46). 5. அழிவின்மை. அனந்தம் நாசமின்மை (நாநார்த்த.436).

1321).

...

...

...

அனந்தம் 2 பெ. வேலிப் பருத்தி. (மலை அக.)

அனந்தம்' பெ. அறுகு. (பச்சிலை. அக.)

அனந்தம்' பெ. குப்பைமேனிச்செடி. (முன்.)

அனந்தம்' பெ. சிறுகாஞ்சொறிச்செடி. (முன்.)

அனந்தம்' பெ. பெருநன்னாரிக்கொடி. (முன்.)

அனந்தம்' பெ. கழுதைப்பாலைக்கொடி. (மரஇன. தொ

அனந்தம் 8 பெ. பொன். அனந்தமும் வசுவும் அருத் தமும் பொருளும் அதற்கே (பொன்) (பிங். 1233).

...

அனந்தம்' (அனந்தரம்') பெ. மயிலின் தலைப் பீலி. அனந்தம் மயூரம் விரிசிகையாகும் (திவா. 528).

அனந்தம் 10 பெ. கோளகபாடாணம்.

(செ. ப. அக.)

5.3.

3

அனந்தர் 9

அனந்தமுடிச்சு பெ. பெ. மகளிர் அணியும் ஒரு பொன் அணி

கலன். (வின்.)

அனந்தமூலி பெ. அரளி. (மரஇன. தொ.)

அனந்தர்1 பெ. 1. (கள்ளுண்ணுதல் உறக்கம் போன்ற செயலால் வரும்) மயக்கம், தடுமாற்றம். அனந்தர் நடுக்கம் அல்லது யாவதும் மனம் கவல்பு இன்றி மாழாந்து எழுந்து (பொருந. 94-95). பழஞ் செருக் குற்ற அனந்தர்ப் பாணியும் (மணிமே. 7, 72). அவ சத்தால் பிறந்த அனந்தர் நோக்கினை நஞ்சு என் றார் (சீவக. 2384 நச்.). அனந்தருள் முரன்றன அன்றிற் சேவலே (சூளா. 1062). அமளியில் துயிலும் நங்கைமார் அனந்தரின் நெடுங்கணோடு ஒத்தவாம் (கம்பரா. 3, 7, 124). புண் அனந்தர் உற்றானை (பெருந்.708). அரியல் ஆர்ந்த அனந்தர் (தணிகைப்பு. நாட்டு.100).2. மனத்தடுமாற்றம். மனங்கொள்ளா அனந்தர் உள்ளமுடையளாய் நாணுமறந்து காதல் ஈர்ப்பச் செல்லும் (தொல். பொ. 102 நச்.). 3. தூக்கம். நீண்ட கண் அனந்தரும் நீங்குகிற்றிலள் (கம்பரா. 2, 2, 52). அரனும் மாலும் வேதனும் அனந்தர் மேவ (தேவிமான். 1, 40).

அனந்தர்' பெ.

விழிப்புணர்ச்சி. கண்துயில் அனந் தர் போலக் கதிகளுள் தோன்று மாறும் (சீவக.

1097).

அனந்தர்' பெ. (தண்ணுமை போன்ற கருவியின்) மந்த ஒலி. (செ.ப.அக.)

அனந்தர்' பெ மயிர்ச்சூட்டு. (கதிரை. அக.)

அனந்தர் பெ. பருத்தி. (வை த். விரி. அக. ப. 25)

அனந்தர் 6 பெ. சமண தீர்த்தங்கரருள் பதினைந்தா

மவர்.

(திருக்கலம். காப்பு உரை)

அனந்தர்' பெ. உருத்திரருள் ஒருவர்.

2, 3)

ஒருவர். (சி.போ. பா.

அனந்தர்' பெ. (சைவம்) சிவபூசை புரிவோர் மனத்துள் கற்பித்துக் கொள்ளும் சிவலிங்கத்திற்குரிய அறுவகை ஆசனத்துள் முடிவின்மை என்னும் இருக்கை. சலா சனம் அனந்தரும் (சைவநெறி பொது.523).

...

அனந்தர்' பெ. பலர், எண்ணற்றவர். ஆடும் மங்கை யர் அனந்தர் (அரிச். பு. 7, 12).