பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/664

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனந்தரகம்

அனந்தரகம் பெ. கருஞ்சீந்தில். (மர இன தொ.)

அனந்தரத்தி பெ. கணவனின் உடன்பிறந்தான் மனைவி.

(குமரி வ.)

அனந்தரத்திலவன் அனந்தரத்திலவன்

5 ஈடு அரும்.).

பெ.

-

அடுத்தவழித் தோன்றல். அவன் மகன் (திருவாய். 10, 7,

அனந்தரப்புல் பெ. அறுகு. (மரஇன. தொ.)

அனந்தரம் 1 பெ. பின்பு, பிறகு. மங்கையங்கு அனந் தரம் வயிறு வாய்த்துழி (பாரதம். 1, 1, 51). கடற் கிடை ஆழ்வோன் அனந்தரம் ஊழ்வினை ஆற்ற லின் அன்னான் தன்மை மதித்தான் (கந்தபு. 3, 5.12). திருவரங்கச் செல்வர் உள்ளே எழுந்தரு ளின அனந்தரமாக அமுதுசெய்தருளும் (தெ. இ. க.

24, 378).

600

அனந்தரம்' பெ. நிதம். (கதிரை. அக.)

அனந்தரம்3 பெ. பிரிவின்மை. (முன்.)

அனந்தரம்' பெ. மேல். (முன்.)

அனந்தரம் (அனந்தம்') பெ.

மயிலின் தலைப் பீலி.

அனந்தரம் மயூரம் விரிசிகையாகும் (ஆசி.நி. 117).

அனந்தரம்" பெ. 1. பருத்தி. (வாகட அக.) 2. வேலிப் பருத்தி. (வைத், விரி, அக, ப. 25)

அனந்தரம் பெ. சிலாவி என்னும் கட்டடவுறுப்பு. (செ. ப.

அக.அனு.)

அனந்தரவன் (அனந்திரவன்) பெ. மருமக்கள் தாய முறையில் காரணவனுக்கு இளையவன். (முன்.)

அனந்தரவாரிசு பெ. அடுத்த உரிமையுள்ளவன். (செ. ப.

அக.)

அனந்தல்' பெ. 1. (கள்ளுண்டதால் வரும்) மதம். பழஞ் செருக்குற்ற நும் அனந்தல் தீர (மலைபடு. 173 கள்ளுண்டு மகிழ்ச்சியுற்ற நும்முடைய மதம் தீரும்படி- நச்.). 2. தூக்கம். ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ (திருப்பா. 9). இரவி இளங்கரத்தால்

5

34

அனந்தற்பத்தி

அடிவருடி அனந்தல் தீர்ப்ப (கம்பரா. 1, 10, 154). திரு அனந்தலினும் முகம் மலர்ந்து வருதெரிவைமீர் (கலிங். 46), 3, மயக்கம். இன்பக் களியான அனந்தல் (சிலப். 4, 46 அடியார்க்). எப்போது அனந்தல் தவிர்ந்து ஏத்த (அழகரந். 20).

அனந்தல்2 பெ. (பறை முதலியவற்றின்) மந்த ஒலி. அனந்தற் பறை (புறநா. 62, 5).

அனந்தலாடு-தல் 5 வி. மிகுதியாகத் துயிலுதல், அனந் தலாடேல் (ஆத்தி. 31).

அனந்தலாவிகம் பெ. காட்டுச்சீரகம். (மரஇன. தொ.)

அனந்தலோசனன்

பெ. 1. புத்தரின்

பெயர்களுள்

...

ஒன்று. அனந்தலோசனன் பூமிசை நடந்தோன் (திவா. 12), 2. கடவுள். (கதிரை. அக.)

அனந்தவாசி பெ.பல என்னும் பொருள்தரும் சொல். சதம் என்பது அனந்தவாசி (தக்க, 73 ப. உரை).

அனந்தவாதம் பெ. ஒரு நோய். (கதிரை. அக.)

அனந்தவிசயம்' பெ. தருமபுத்திரருடைய சங்கு. தருமன் மைந்தன் அனந்தவிசயம் எனும் நந்து அரவம் செய்தான் (பகவற். வெண். 1, 14).

அனந்தவிசயம் பெ. தொண்ணூற்றாறு மண்டல லிங்கங் களுள் ஒன்று. அனந்தவிசயம் முதலிய தொண் ணூற்றாறு மண்டலலிங்கங்களுள் (சைவ, நெறி பொது.

123 உரை),

...

அனந்தவிபவை பெ. பார்வதி. சின்மயை விபவை... துர்க்கை (கூர்மபு. பூருவ.12,23).

அனந்தவிரதம் பெ.புரட்டாசி வளர்பிறைச்

அனந்த

சதுர்த்

தசியில் திருமாலை வணங்கி நோற்கும் ஒரு நோன்பு. (அபி. சிந்.)

அனந்தவீரியர் பெ. (சைனம்) இருபத்து மூன்றாம் தீர்த் தங்கரர். (சங். அக.)

அனந்தவெள்ளம் பெ. சூடாக்கின நீர். (தொ. வ,)

அனந்தற்பத்தி பெ. (கோடையில் இளைப்பாறுவதற் குரிய) கொடிபடர்ந்த பந்தல். (வின்.)