பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/666

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனந்தை +

அனந்தை* பெ. திருவனந்தபுரம். வருக்கைகள் சூழ வளர் அந்தைக் கோமான் (சேரவேந். கோவை, குணரத்ன. 1). செந்நெல் வயல் சூழும் தென் அனந்தை மாநகரின் (திருவனந்தை விலா. காப்பு).

அளந்தை" பெ. சந்திரவாணன் என்ற குறுநிலமன்னன் தலைநகர். அனந்தையாதிபதி சந்திரவாண

பாலன்

(பெருந்.1250).

அனந்தை பெ. சிறுகாஞ்சொறிச்செடி.

436)

அனந்தை' பெ. நன்னாரி. (முன்.)

அனந்தை8 பெ. குப்பைமேனி. (முன்.)

அனந்தை' பெ. அறுகு. (முன்.)

மதி

(நாநார்த்த.

அனந்தை 10 பெ. கடுமரம். (முன்.)

அனந்தை 11 பெ. சீந்தில். (முன்.)

அனந்தை 12 பெ.

கொற்றான் கொடிவகை. (மரஇன.

தொ.)

அனந்தை 13 பெ. செங்காந்தள். (த.த. அக.)

அனபரன் பெ. பிரமன். (கதிரை. அக.)

அனபாயன் (அநபாயன்) பெ. 1. (பொதுவாகச்) சோழன். ஆழிப் பெருமான் அபயன் அனபாயன் (குலோத். உலா 159). அனபாயன் சங்கரமூர்த்தி நல் லூர் (சங்கர. கோவை 188). 2.(சிறப்பாக) இரண் டாம் குலோத்துங்க சோழன். இகன்மதமால் யானை அனபாயன் எங்கோன் (பெருந்.639). சோழன் அனபாயன் அரசவை (பெரியபு. பாயி. 8). புனை அனபாயன் விளங்கிய பூங்கழல் போற்றி (கோயிற்பு. பாயி).

200

வென்றி

அன்பை பெ. (சோதிடம்) கிரகச் சேர்க்கையுள் நன்மை தரும் கோள் பன்னிரண்டாம் இடத்திலிருப்பதான ஒரு யோகம். (விதான. சாதக. 23/செ.ப. அக.)

அனம்` (அன்னம்') பெ. 1. (பாலிலிருந்து நீரைப் பிரித்து உண்ணும் இயல்புடையதாகவும் அழகிய நடை உடையதாகவும் கூறப்படும்) ஒரு வெண் ணிறப் பறவை. இள அனம் ஆலும் இடைச்சுரம் மேவிய (தேவா. 1, 78, 10). 2. அன்னக்கொடி. கஞ்சம் அனத்தை உயர்த்தோன் வியந்தனன்

(தில். கலம்.15).

536

அனர்த்தம்

அனம்' (அன்னம்3) பெ. சோறு. பாசு அனம் தன்

னொடு நண்ணாது

298). அனம் வழங்க

உண்ணாது (சங்கர. கோவை

(கூளப்ப, காதல் 29).

அரன்

அடியார்கட்கு அனம் அளித்து உளம் மகிழ்ந்திடு வார் (ஞான. உபதேசகா. 2600).

அனம்' இ. சொ. வேற்றுமைப் பொருளிலும் வினைக் குறிப்பிலும் வரும் வடமொழி விகுதிகளுள் ஒன்று. புச + அனம் = போசனம் (வீரசோ. 64 மேற்)

அனம்பு1 பெ. சாதகப்புள். (கதிரை. அக.)

அனம்பு' பெ. நீரில்லாதது. (முன்.)

அனமுயர்த்தோன் பெ. நான்முகன். தண்டுளவோன்

அனமுயர்த்தோன்

உபதேசகா. 1681).

...

பூசை பண்ணுமின்

(ஞான.

அனமூர்தி பெ. (அன்ன வாகனமுடைய) நம்மாழ்வார். அனமூர்தி மாறன் மங்கையூரினன் நம்மாழ்வான் சடகோபனாம் (நாம. நி.135)

அனயகம் (அனயம்2) பெ. 1. இருவாட்சி. (வைத், விரி. அக. ப. 5) 2. மல்லிகை. (முன்.)

அனயம்' (அநயம்) பெ. 1. தீவினை. (நாநார்த்த. 423) 2. நன்மையின்மை. (முன்.) 3. துன்பம். (மூன்.) 4. ஆபத்து. (முன்.)

அனயம்' (அனயகம்) பெ. இருவாட்சி. (மரஇன. தொ.) அனர்த்தப்படு-தல் 6 வி. 1. துன்பப்படுதல். அவ தாரந்தன்னில் வந்தால் சசாதீயப் பிரதிபத்தி பண்ணி அனர்த்தப்பட்டுப் போவாய் (திருவாய். 1,

...

3, ஈடு, பிர.). 2. குழப்பமாயிருத்தல்.(செ.ப. அக.)

அனர்த்தபரம்பரை பெ. துன்பத்தொடர்ச்சி. (முன்.) அனர்த்தம் (அநர்த்தம்) பெ. 1. பொருளல்லாதது, பொரு ளற்றது. அனர்த்தம் பொருளின்மை ஆகும் (திவா. 2060). பாவம் பெற்று அனர்த்தமே கழிப்பதோ (சீவசம். 59 உரை). 2. பயனற்றது. அருத்தங்கள் அனர்த்தமாகும் அளவில் போகங்கள் நோயாம் (ஞானவா. உற்பத்தி. வீமபா 5). 3. கொண்ட நோக்கத்தி லிருந்து மாறுபட்டுப் பிழையாக முடிகை. அவர் நல்லெண்ணத்தில் சொன்னது அனர்த்தமாக முடிந் தது (பே.வ.). 4. துன்பம். அனர்த்தமான தன் மற தியைக் கெடுத்து (கைவல்ய. சந்தே. 71). சுத்தம் எய்தி னர் பிறவியான அனர்த்தத்தில் என்றும் எய்தார்