பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/667

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனர்வன்

(ஞானவா. வைராக். 28). அனர்த்தம் வரப்பந்தலிட் டார் (நல்லதங். ப. 38). 5. கேடு, விபரீதம். திருமந் திரம் சொன்னால் மேல்தானே ஓர் அனர்த்தம் விளையாதிறே (பெரியதி. 1, 1, 2 தமிழாக். வியாக்.). ஐயோ சிவனே என்றான் அனர்த்தம் வந்து சேர்ந்தது என்றான் (காத்தவரா. ப. 136).

அனர்வன் (அனரவன்!) பெ. காந்தள். (மரஇன.தொ.)

அனரசம் பெ. அரிசிமாவுடன் நெய் முதலியன கலந்து செய்யும் இனிப்புப்பண்டம். (செ. ப. அக.)

அனரவன்! (அனர்வன்) பெ. 1. வெண்தோன்றி. (மலை அக.) 2. செங்காந்தள். (செ.ப.அக. அனு.)

2

அனரவன் 2 பெ. பஞ்சபட்சி பாடாணம். (ராட். அக.)

அனல்' (அன்னல், அனலம்') பெ. 1. (ஐம்பூதங் களுள் ஒன்றாகும்) தீ. அனல் கை ஏந்தி அழகன் ஆடுமே (காரை. பதிகம் 2,2). நிலம் தண்ணீரோடு அனல் கால் விசும்பின் நீர்மையான் (தேவா. 2, 63, 7). புனல் உருவாய் அனல் உருவில் திகழும் சோதி (திருமங்கை. திருநெடுந். 1). அம்பரமே நிலனே அனல் காலொடு அப்பு ஆனவனே (திருவாச. 6, 20). அனல் வரு கானகத்து (கம்பரா. 3, 3, 4). அரக்கு மாளிகை யில் அனல் எழுப்பிய மன்னவன் (பாரதவெண். 126 உரை). புகைமிகும் அனலில் (சேந், திருவிசை. 3,8). அனல்சுடவும் ஒண்ணாது புனல் நனையாது (பாரதி. தோத்திரம். 68, 27). 2. வேள்விக்கு வளர்க்கும் தீ. அரணிய மந்திர அனலகள் அவை உதவும் பெருமழையே (கலிங். 272). சாலை செய்து அனல் வளர்த்தோம் நன்கு ஆற்றல் வேண்டுமால் (செ. பாகவத. 7, 3,15). 3. அக்கினித்தேவன். அருக்கனும் அனலும் அஞ்சுறும் சோதிய (கம்பரா. 3, 6, 36). எச்சன் இந்து அனல் (திருவாச. 13, 4). 4.ஒளி. அனலுமாய வேடங்காட்டி (தேவா. 7, 6,9).5. சூடு. நெருப்பாய் அனற்சுவை அமுதாய் (பாரதி. கண்ணன்.

2, 7).

அனல்'

பெ. இடி. பைம்புனலோடு அனல் அகடு அடக்கி (இரகு. ஆற்று.4).

அனல்' (அனலம்4) பெ. கொடிவேலி, (பச்சிலை. அக.)

அனல்' பெ. 1. உணர்வு. (கதிரை. அக.) 2. உயிர் வேதனையிலொன்று. (முன்.)

537

அனல்வென்றி

அனல்(லு)-தல் 3 வி. 1. வெப்பம் அடைதல். இரும்பு அனன்று உண்ட நீரும் (திருமங்கை. திருக்குறுந். 13). செரு விளைத்து அனலும் வேலோய் (சீவக. 2077). 2. கோபித்தல். இன்றிவனனலும் போழ்தின் எதிர் நின்று கனற்றி (சூளா. 1144). 3. (சினத்தால் கண்) ஒளிவிடுதல். அனலும் தறுகண் வேழம் (பெரியதி.

6, 10, 3).

அனல்காலி! (அனல்காவி) பெ. சூரியகாந்தக்கல். (மூலி. அக.)

அனல்காலி' பெ. சிவந்த கால்களையுடைய நஞ்சுள்ள சிலந்திப்பூச்சி. (சாம்ப. அக.)

அனல்காவி (அனல்காலிட்) பெ. சூரியகாந்தக்கல். (சித். பரி. அக.ப. 156)

அனல்படுபாறை பெ. சூட்டினால் கொதிக்கும் கற்பாறை. அனல்படுபாறைக்கண் வைகிப் புழுவின் உருள்வ பொரிவ பொடிவ (சூளா. 1929).

அனல்பாலி பெ. தில்லைமரம். (செ.சொ. பேரக.

அனல்மின்சாரம் பெ. (இக்.) நிலக்கரி

போன்ற

பொருளை எரித்து வரும் அனல் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம். (அறிவி. 10 ப.180)

அனல்வாதம்1 பெ. 1. உடம்பின் வெப்பத்தினால் உண் டாகும் வாதநோய். (செ.சா. பேரக.) 2. மிகுந்த எரிச்சலையுண்டாக்கும் வாதநோய். (சாம்ப. அக.)

அனல்வாதம்2 பெ. திருஞானசம்பந்தர் மதுரையில் திருப்பதிக ஏட்டைத் தீயிலிட்டு வேகாதபடி செய்த வெற்றிச் செயல் போன்றவை. (பெரியபு. 28, 779-791) அனல்வாதை1 பெ. வெப்பநோய். (செ. சொ. பேரக.) அனல்வாதை' பெ. எரிபசி. (முன்.)

அனல்வாதை' பெ. தண்டனையாலோ பகைமையாலோ உயிருடன் எரிக்கப்படுகை. (முன்.)

அனல்விதை (அனல் விரை ) பெ. நேர்வாளம். (வாகட

அக.)

அனல்விரை (அனல் விதை) பெ. நேர்வாளம் என்னும் நச்சு மருந்துச் சரக்கு. (பச்சிலை. அக.)

அனல்வீசு-தல் 5 வி. (நெருப்பிலிருந்து அல்லது வெப் பத்தையுடைய பொருளிலிருந்து) வெப்பம் தாக்கு தல். கோடைக்காற்று அனல் வீசுகிறது (பே.வ.). அனல்வென்றி பெ. பொன். (வைத். விரி. அக. ப. 11)