பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/669

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனலுண்ணி

அனலுண்ணி பெ. நெருப்புக்கோழி (செ. சொ. பேரக.

600

அனலேறு பெ. இடி. அனலேறும் இதன் (இடி) பேர் என்ப (சூடா. நி. 1, 92).

அனலோடுவேந்தன் பெ. கார் முகிற்பாடாணம். (வின்.)

அனவத்தானம் பெ. 1. உறுதியின்மை. (கதிரை. அக.) 2. தீய நடை. (முன்.)

அனவத்தை பெ. (தருக்கம்) முடிவின்மை என்னும் குற்றம். இம்முறையில் மாற்ற மன் அனவத்தை வரும் (சிவதரு. 10, 28).

அனவதானம் பெ. நினைவின்மை. (கதிரை. அக.)

அனவரததானர் பெ. திருநெல்வேலிச் சிவபிரான் பெயர். ஆதி அனவரததானர் பதம் அகத்துள் வைப்பாம் திருநெல்.பு கடவுள். 7).

அனவரததானன்

பெ. நெல் முதலியன அளக்கும் மரக் காலின் பெயர். இத்தேவர் மரக்கால் அனவரத தானனால் நெல்லு இரண்டாயிரத்து அறநூற்றுக் கலம் (தெ.இ.க. 14, 154).

அனவரதம்

வி. அ.

எப்பொழுதும், நாள்தோறும். மனத்தகத்தே அனவரதம் மன்னி நின்ற திறலானை (தேவா.6,68,8). அல்லும்பகலும் அனவரதமும் துதித்தால் (சரசு. அந். காப்பு.). அனவரதம் பாவித்தல் சொல்லுதல் செய்கை ஆயிற்று (பெரியதி. 2, 6, 1 வியாக்.). அனவரதம் அமரர் அரிவையரொடு வருவர் (பெருந். 164).வழிவருவோரையெல்லாம் அனவரதமும் பறித்தே அடித்து உயிர்வதைத்து (ஞான உபதேசகா. 1118). சிந்தை அனவரதமும் கலங்கி அரற்றுவர் (சோலை. குற. 149). தெரிசிக்கவும் பண்ணி அனவரத நடனமும் சேவிக்கவும் புரிவனே (தில். கலம். 78). அவளே துணையென்று அனவர தம் நெஞ்சம், துவளாதிருத்தல் சுகம் (பாரதி. தோத் திரம். 17, 1).

அனற்கண்டர் பெ.துரிசு. (சாம்ப. அக.)

அனற்கல் பெ.

(நெருப்புண்டாக்கும்)

சிக்கிமுக்கிக்

கல். (தைலவ. 127/செ. ப. அக.)

அனற்காற்று பெ. கோடைக்காலத்தில் அடிக்கும் வெப் பம் மிகுந்த காற்று. அக்கினி நட்சத்திரத்தில் அனற் காற்று வீசும் (பே.வ.).

5

39

அனன்

அனற்குவை பெ. நெருப்பின்மீது வைக்கும் கலம். அனற்குவை ... அக்கினிட்டிப்பெயர் (பிங். 694).

அனற்கொடியோர் பெ. (தீயைக் கொடியாக உடைய) அந்தணர். அந்தணர் அனற்கொடியோர் பிராமணர் (நாம.நி.133).

அனற்சுக்கிரன்

அக. அனு.)

...

பெ. ஒருவகைக் கண்ணோய். (செ. ப.

அனற்சுண்ணம் பெ.

பிரண்டைத்தூள், சதுரக்கள்ளிப் பட்டை, உப்பு முதலிய சரக்குகளைச் சேர்த்துப் பொடி செய்து, மேனோக்கும் வளி, காமாலை முதலிய நோய் களுக்குக் கொடுக்கும் சுண்ணம். சுண்ணம். (செ. சொ. பேரக.)

அனற்சுரம் பெ. உடம்பில் நெருப்பைப் போல் சூட்டை யுண்டாக்குங் காய்ச்சல் நோய். (முன்.)

அனற்பொறி பெ. தீப்பொறி. அனற்பொறி... என்னப் பிதிர்ந்தன மலையும் (கம்பரா. 6, 18, 93). பகழி ... விரிந்து அனற்பொறி சிதற (சென்னிமலை. பு. சும்பன்.

30).

அனற்றாகம் பெ. அனலினால் ஏற்படுந்தாகம். (செ.

சொ. பேரக.)

அனற்றிராவகம் பெ. அனலிறக்கியம். (சாம்ப. அக.)

அனற்று1-தல் 5 வி. 1. வெப்பமடையச் செய்தல். அனற்றினை துன்பு அவிய (பரிபா. 6, 84).2 எரித்தல். அனற்றினான் அல்லன் என்று இக்காலத் தும் வெறுத்தார் (கச்சி. காஞ்சி. கழுவாய். 179). 3. சினத்தல். அரசிளங்குமரனை அனற்று மாற்றலர் (சூளா. 1219). 4. வயிறு உளைதல். எனக்கு வயிறு அனற்றுகிறது (வட். வ.). (வட். வ.). 5. சுரவேகத்தால் முன குதல். காய்ச்சலால் அனற்றுகிறான் (திருநெல்.

al.).

அனற்று-தல் 5 வி. வீணே உதவுதல். ஐந்து ரூபாய் உனக்கு அனற்றினேன்

(வட், வ.).

அனற்று பெ. (அனல் சான்றாகச் செய்யப்படும்) திருமணம். (கதிரை. அக.)

அனற்றுறை பெ. வேள்வித் தீ. அனற்றுறை முற்றி எம்மை விரைசுக வல்லை (கம்பரா. 1, 10, 115).

அனன் பெ. அன்னத்தை வாகனமாகக் கொண்ட) நான்முகன். (கதிரை. அக.)