பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/673

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனாதைப்பிரேதம்

அனாதைப்பிரேதம் பெ. கவனிப்பார் இன்றிக் கிடக்கும் பிணம். அனாதைப் பிரேதத்தை எடுத்து அடக்கம் செய்தார்கள் (நாட்.வ.).

அனாதைப்பிள்ளை பெ. பாதுகாப்போர் இல்லாத சிறு

வன். அனாதைப்

கிறான் (பே.வ.).

பிள்ளையை அன்பாய் வளர்க்

அனாதையில்லம் பெ. பாதுகாப்பில்லாதவர்க்கு அமைந்த

விடுதி. (இந். பண்பாடு 12 ப.209)

அனாந்தம் பெ. அழகின்மை. (கதிரை. அக.)

அனாமத்து (அமானத்து) பெ. i.

இன்னாருக்கு

இன்ன கணக்கு என்று வரையறுக்கப்படாதது. இது அனாமத்துச் செலவு (பே. வ.). 2.

(கதிரை. அக.)

பொது.

அனாமத்துச்சிட்டா ( அமானத்துச்சிட்டா)பெ. (வகைப் படுத்தாத) பொதுக்குறிப்பேடு. (செ.ப.அக.)

அனாமயம் (அநாமயம்) பெ. நோயில்லாமை. ஆக்கள் இம்பர் மிசை அனாமயமாயிருந்த போதில் (பெரிய பு. 63,2). அசடம் அனாமயம் அசங்கம் (கைவல்ய. சந்தே. 137).சாற்று சிவம் பின்னம் அனாமயம் என்று ஆகமம் சொல் இலக்கணங்கள் (சிவப்பிர.

விகா. 57).

...

.

அனாமயன்1 பெ. நோயற்றவன். நாமம் இல்லோன் நாதன் அனாமயன் (ஞானா.55,11).

அனாமயன் 2

(அநாமயன்) பெ. (தனக்கெனப் பெயர் ஒன்றில்லா இறைவன்) அருகன். சாத்தன் அனாமயன் சுயம்பு ... அருகன் பேராகும் (சூடா.

...

நி. 1, 4).

அனாமிகை 1

(அநாமிகை, அனாமை!) பெ. பெய ரில்லாதது. ( கதிரை. அக.)

அனாமிகை' (அனாமை ) பெ. மோதிர விரல். அங் குட்டத்தாலும் அனாமிகை யாலும் இரண்டு கண் ணையும் தொட்டு (தத்து.பிர. 77 உரை). வடத்தை அனாமிகையில் செபிக்க (சிவதரு. 3,3). பெரு விரலை அனாமிகையோடு இயையக்கூட்டி (கூர்மபு. உத்தர. 13,10).

அனாமிட்டன் பெ. தேவன். (கதிரை. அக.)

543

அனாவசியகம்

அனாமை1 (அநாமிகை, அனாமிகை) பெ. பெய ரில்லாதது. (சங். அக.)

அனாமை' (அனாமிகை') பெ. மோதிரவிரல். (முன்.) அனாய் (அன்னாய்?) பெ.. அன்னை (தாய்) என்ற சொல்லின் விளியேற்ற வடிவம். பரன் பகுளையை வழுத்தி அனாய் மகள்தரக் காவலன் கருதான் (வேங்கடேச மகத். 362).

...

அனாயதித்தம் (அனாதிரியதித்தம், அனாரியதித்தம், அனாரியனித்தம்) பெ. நிலவேம்புச்செடி. (கதிரை. அக.)

அனாயம்' (அநாயம்) பெ. முறைகேடு, அநியாயம். சீர்மையின்றி அனாயமே சிந்தணர்க்கு எளி யேனலேன் (தேவா. 3, 39, 7).

...

அனாயம்' (அநாயம்) பெ. வீண்.

உளதாம் ஆவி

அனாயமே உகுத்து என் (கம்பரா. 6, 15, 141).

அனாயாசம் பெ. சிரமமின்மை, எளிது. அதை அனா யாசமாகச் செய்துவிட்டான் (பே.வ.)

அனார் (அன்னார்2) பெ. ஒத்தவர். கண் அனா ரொடு (சூளா. 143).

...

அனா.

அனாரதம் வி. அ. எப்போதும். அனவரதம் ரதம் எப்போழ்துமாகும் (உரி. நி. பண்புப்.8).

அனாரியதித்தம் (அனாதிரியதித்தம், அனாயதித்தம், அனாரியனித்தம்) பெ. நிலவேம்புச்செடி.

விரி. அக. ப. 25).

(வைத்.

அனாரியம் பெ. வீரமற்ற தன்மை. பூரியர் போல் மனம் புழுங்குறலாயினை அரும்புகழ் தேய்ப்பதும். அனாரியத்தகைத்தும் பெண்மை ... எய்தினை (பாரதி. தேசியம். 32, 169-170).

...

அனாரியன் பெ. (ஆரியனல்லாதவன்)

அனாரியர்

மிலேச்சன்,

...

மிலேச்சரும் ... பேரே (சூடா. நி.

2, 31).

அனாரியனித்தம் (அனாதிரியதித்தம், அனாயதித்தம், அனாரியதித்தம்) பெ. மலைவேம்புச்செடி. (பச்சிலை.

அக.)

அனாவசியகம்

(அநாவசியம், அனாவசியம்) பெ.

தேவையற்றது. (செ.ப.அக.)