பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/676

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனிலம்3

அனிலம்3 பெ. பயம். அனிலமே பயம் ... (அக. நி. அம்முதல். 119).

அனிலமார்மூலை பெ. வாயுமூலையாம் வடமேற்கு. சங்கரன் விரும்பி வாழும் அப்பெருங் கோயில் தாங்கி அனிலமார் மூலை மன்னும் உத்தமக் களிற் றின் (திருவால.பு.13,12).

அனிலவன் (அனிலன்) பெ. (காற்றுக்குத் தேவதை) வாயுதேவன். அனிலவன்பால் பூசனை இயற்றி

(வாட்போக்கிப்பு. வாயு. 16).

அனிலன்1 (அனிலவன்) பெ. 1. (காற்றுக்குத் தேவதை) வாயுதேவன். அனிலம்-காற்று; அதனை யுடையவன் அனிலன் (தக்க. 458 ப. உரை). அனிலன் சண்ட வேகமும் குறைதர (கம்பரா. 6,37, 147). அனிலன் மைந்தன் பிறந்தனனாக (பாரதம். 1,2, 78), அனிலன் மன்னு திக்கினில் (பரஞ்சோதி. வேதார. பு. சபை. 14). அனுக்கை பெற்று அனிலன் தடத்து உக்கன (பெருந்.பு.36, 5). 2. உயிர்வளி, பிராணவாயு. தனுவதனிலுறும் அனிலனையும் இயக்கி (சிவப்பிர.

43).

அனிலன்' பெ.

...

அனிலன்

...

அட்ட வசுக்களுள் ஒருவன். துருவன் எண் வசுக்களாகும் (நாம. நி. 67).

அனிலன்' பெ. ஓர் அவுணன். அனிலன் ஓர் அவுணன் (அரும்.நி.678)

அனிழம் (அநிழம்) பெ. (அநிழம்) பெ. அனுட நட்சத்திரம், ஏகா தசியும் பெற்ற அனிழத்து நாள் திருமலையில்

...

(தெ.இ.க. 4, 286).

..

அனீகம்! பெ. 1. படை, சேனை, தாரே தண்டம் அனீகம் திரள் படை என்ப (திவா.315). அமரர் நாடு இழிந்தது என்னப் பொலிந்தது அவ் வனீக வெள்ளம் (கம்பரா. 1,14,28).அலகிலானை அனீகமொடு எய்தினான் (திருவிளை. பு. 12, 17). 2 அக்குரோணி என்னும் பெரும் படையின் மூன்றில் ஒரு பகுதி. அனீகம் மும்மடி அக்குரோணியாகும் (பிங். 1650). 3. போர். அனீகம் போர் சேனை என்ப (நாநார்த்த. 430).

அனீகம்' பெ. கவலையின்மை.

அனீகனி பெ.தும்பை.

(கதிரை. அக.)

(பச்சிலை. அக.)

அனீகினி ' பெ. படை. அனீகினி தூளிகண் புதைத்த

(பாரதம். 1, 3, 76).

546

அனு

.30

அனீகினி 2 பெ. தாமரை. (கதிரை. அக.)

அனீச்சுரத்துவம் பெ. ஈசத்துவமின்மை. (செ. ப. அக.

அனு.)

அனீசன் பெ. 1. தலைவனில்லாதவன். (கதிரை. அக.) 2. திருமால். (முன்.)

அனீசு பெ. பெருஞ்சீரகம், நட்சத்திரசீரகம். (த. த. அக.)

அனீசுவரவாதி பெ. கடவுள் இல்லை என்னும் கொள்கை யுடையோன். (செ. ப. அக. அனு.)

அனீசுவரன்

பெ.

தலைமையாந் தன்மை இல்லாத

ஆன்மா. அனீசுவரன் அக்கிரியன் (சருவஞா. 48)

...

ஆன்மா

அனீதி பெ. அனியாயம். அனீதியெல்லாம் அமைந்து படிபுரக்க வந்தது (குமணசரித். 280).

...

அனு1 பெ. 1. ஒத்த தன்மை, பிரதி. (த.த.அக.) 2.(ஒருவர் செய்ததற்கு) மாற்றுச்செயல். உன்னை யல்லது இனிச்செய்துமுடிக்க வல்லவர் மற்றிதற்கோர் அனுவே என்ன (பாரதம். 7, 1, 37).

யார்

...

அனு2 பெ. தொடர்ச்சி. அனு எனும் பெயரே தொடர்ச்சியும் கவுளுமாம் (வட..130).

அனு பெ. ஒழுங்கு. அனு ஒழுங்கு (நாநார்த்த.

435).

அனு பெ. அருகு. அனு சமீபம் (முன்.).

...

அனு5 பெ. (யாப்.) மோனை (இன) எழுத்து. அகர மோடு ஆகாரம்

53 Cup.).

6

அனு பெ.

...

ஆகாத அல்ல அனு (யாப். வி.

அடையாளம். (கதிரை. அக.)

அனு' பெ. 1. அற்பம். (முன்.) 2. கீழ். (முன்.)

அனு பெ. தனிமை. (முன்.)

அனு பெ. பங்கு. (முன்.)

அனு10 பெ.

1. கன்னத்திலிருந்து தாடை வரையுள்ள முகத்தின் பகுதி. நின் அனு வற்றிடலால் அனுமன் எனும் பேர் பெற்று (உத்தர. அனுமப். 34). கபோலம் கொடிறு அனு கவுள் கதுப்பாகும் (பிங். 1031).