பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/678

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனுக்கு-தல்

மா கால் (கம்பரா. 5, 2, 2). ஆடுநர் தீவினை அனுக்கிப் பேரின்ப வீடு அருள் (கச்சி. காஞ்சி. தீர்த். 158).2. (ஒப்பிடப்படும் பொருள் ஒப்புமைக்குரிய பொருளைத் தன்மையால்) குறையச் செய்தல். தீங்கரும்பு அனுக்கிய திருந்து தோள்களும் (சீவக. 1942). கடிமணம் அனுக்குந் தெய்வக் கழலடி (சூளா. 553). கரும்பு அனுக்கு தீஞ்சொல் (கச்சி. காஞ்சி. கழு. 15). 3. தூண்டில் மிதப்பு தண்ணீருக் குள் மூழ்கி மூழ்கி எழுதல். (இலங்.வ.)

அனுக்கு-தல் 5 வி.

கண்டனை

5 வி. வருத்துதல். மை அனுக்கிய (தேவா. 5,83,5). மென்மருங்கு அனுக் கும் குறை எம்முலைத்தமை (கோனேரி. உபதேசகா. 9, 381). அல்லை அனுக்கும் இரவி (குசே. 466).

அனுக்கு3-தல் 5 வி. அடக்குதல். கருதார் மைந்து அனுக்கு ... மன்னாம் (செ. பாகவத. 9, 16, 6).

அனுக்கு-தல் (அனுங்கு' - தல்) 5 வி. கொக்கான் முதலிய விளையாட்டில் தொடக்கூடாததைத் தொடுதல். (செ.

ப. அக.)

அனுக்கு-தல் 5 வி. அசைத்தல்.

(செ. சொ. பேரக.)

இனியாம்

அனுக்கு' பெ. வருத்தம். அனுக்கோடு

வந்தால் (பத்ம. தென்றல். தூது 110).

அனுக்கு7 பெ. கால் மாத்திரை அளவுகொண்ட தாள உறுப்பு. அனுக்கு ... கால் மாத்திரைப் பேர் சொன்னார் (முப்பத்தைந். தாள. 15).

அனுக்குசிரம் பெ. மெய்ப்பாடு தோன்றத் தலை யசைக்கை (சிர அவிநய வகை). (பரத. 1, 79)

அனுக்குதல் பெ. தேசிக்குரிய இருபத்து நான்கு கால் களில் பதினேழாவது கால். (சிலப். 3, 14 உ.வே.சா. அடிக்குறிப்பு)

அனுக்கை1 பெ. அருள். மறித்து ஓடி எவ்வரசும் சரிய வென்று வரும் அனுக்கைப் பல்லவர்கோன் (கலிங். 366). அத்தகு ஞான பூமி

அடைந்தனன்

அனுக்கை தன்னால் (தந்திவனப்பு. 174).

அனுக்கை' பெ. ஒப்புதல், அனுமதி. சோமசுந்தரன் அனுக்கையால் (கடம்ப. பு. 149). அனுக்கை பெற்று அனிலன் தடத்து உக்கன (பெருந்.பு. 36, 5). தந்தை யரைப் பணிந்து அனுக்கை பெற்றுப்பரவி (ஞான.

உபதேசகா. 1646).

வணங்கி

அனுக்கை பெற்று

(உத்தரகோ. பு. பாயி. 1, 45).

அய்யன் அனுக்கை

பெற்று (தெய்வச், விறலி, தூது 611).

5

48

அனுகரணவோசை

அனுகதம் பெ. தொடர்ந்து வருவது. அனுகதமாய் அப்பொழுதே ... பார்வைகள் வந்து அடையா நிற்கும் (ஞானவா. உற்பத்தி. தாசூரன். 21).

அனுகதனம் பெ. உரையாடல். (கதிரை. அக.)

அனுகம் பெ. செஞ்சந்தனம். (வைத், விரி. அக. ப. 25)

அனுகம்பம் பெ. பிறருடைய துன்பம் கண்டு இரங்குகை. உதாரம்,தாழ்ச்சி, உறவு, அனுகம்பம், கோபம் தீர்த்திடல் என்னும் ஐந்தும் உடையரே சிறந்தார் (சிவதரு. 4,39).

அனுகமனம் பெ. உடன் கட்டையேறுகை. (சங். அக.)

அனுகரணத்தொனி பெ. ஒலிக்குறிப்புச் சொல். (செ. ப. அக. அனு.)

அனுகரணம்1 பெ. 1. ஓர் ஒலியை நீட்டி ஒலிக்கும் செய்கை. பண்டமாற்றின் கண்ணும் விளித்தற் கண்ணும் அளபெடை அனுகரணங்கள் வந்து (யாப். வி. 4 உரை). 2. ஊரில் எழும் கல் என்பது போன்ற ஒலிக்குறிப்பு. கல் என் பேரூர் (சிலப். 12, 12 கல்- அனுகரணம். அடியார்க்.).

அனுகரணம் 2

பெ. துணை, அனுசரணை. உண்டிக்கு அனுகரணம் மாலூர் (வில்வம்) (தேரை. வெண். (தேரை.வெண்.

41).

...

அனுகரணம் பெ. ஒன்றன் செயல் போலச் செய்கை. (த.த. அக.)

அனுகரணம் பெ. (அறிவி.) தற்காப்பிற்காக விலங் கினங்கள் தம் நிறம் முதலியவற்றை மாற்றிக் கொள் ளுகை. (இயற்கை. க. சொ.ப.149)

அனுகரணமகாசத்தம் பெ. அனுகரணவோசை.

சிரிப்

புப் போய் மொகுமொகுவென்னும் அனுகரண மகாசத்தம் பிறந்து (தக்க. 90 ப. உரை).

அனுகரணவுபயவோசை பெ. இரட்டையொலிக் குறிப்பு. வெடுவெடெனல் திடுதிடெனல் பிறவும் அனு கரணவுபயவோசைப் பெயரே (பிங்.2117).

...

899

அனுகரணவோசை பெ. ஒன்றைப் போலவே ஒலிப்பது, ஒலிக்குறிப்பு. இம்மெனல் கல்லெனல் பிறவும் அனுகரணவோசை (பிங். 2116). பொரு பொரியும் அனுகரணவோசை (தக்க. 415 ப. உரை).

என்றது