பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/680

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனுங்கு-தல்

அனுங்கு-தல் 5 வி. 1. முணுமுணுத்தல். (யாழ். அக.

அனு.)

2.

சிணுங்குதல். (முன்.) 3. அரைகுறை

மனத்துடன் தயங்குதல்.

(செ. ப. அக.)

அனுங்கு-தல் 5வி. 1. அசைதல். (கதிரை. அக.) 2. புரளுதல். (முன்.) 3. முட்டுதல். (முன்.)

அனுங்கு-தல் (அனுக்கு4-தல்) 5 வி. கொக்கான் முதலிய விளையாட்டில் தொடக்கூடாதது தொடப்படுதல். (யாழ்.

அக.)

அனுச்சை பெ. இசைவு, விடை. நற்றவர் அனுச்சை கொடு நல்மனை புகுந்தான் (கம்பரா. 1, 21, 42). வாசல் காக்கும் நந்திதன் அனுச்சை பெற்றே (தந்தி வனப்பு. 376). தாதையை இறைஞ்சினாள் அனுச்சை கொண்டெழுந்தாள் (திருவிளை. பு. 4, 71).

அனுசகம் பெ. சந்தனம். (வைத். விரி. அக. ப.6)

அனுசங்கம் ! பெ. 1. (இலக்.) அதிகாரத்தால்

வரு

வித்து முடிப்பது. (பிர.வி.50 உரை) 2. தொடர்பு. அகங்காரனுசங்கமாய் இருக்கிற பிராணாதி வாயுக் களுக்கும் (சி.சி. 2, 65 சிவாக்). 3. சொற்புணர்ச்சி. (மதுரை. அக.) 4. புணர்ச்சி. (முன்.)

அனுசங்கம்' பெ. இரக்கம். (கதிரை. அக.)

அனுசங்கம்' பெ. உருக்கம். (முன்.)

அனுசங்கம்' பெ. விருப்பம். (முன்.)

அனுசதாசிவர் பெ. சதாசிவதத்துவத்தில் இருக்கும் பிரணவர் முதலான பதின்மர். சதாசிவ தத்துவத் திலிருக்கும் அனுசதாசிவர் பதின்மருக்கும் (சி. சி. சுப. 44 மறைஞா.).

...

அனுசதிகன் பெ. நூறு காலாட்படைக்குத் தலைவன்.

(சுக்கிரநீதி 2, 141)

...

அனுசந்தானம் பெ. 1. இடையறாது சிந்திக்கை. மண்ணிய நைவேத்தியம் அனுசந்தானம் (திருமந் 1007). சங்கற்பம் வேட்கை அனுசந்தானம் தவிர்த்தி என்னின் ... மனோலயம் தான் அது வாகும் (ஞானவா. உபசாந்தி. உத்தால, 3).2. இடை யறாது ஓதுகை.ஓங்காராதிகள் அனுசந்தானத்தால் பரத்தின் உள்ளம் அடங்குதலே மந்திரயோகம் (வேதா.சூ. 135).

5

50

அனுசரணை

அனுசந்தானம்பண்ணு-தல் 5 வி. வில்லில் அம்பு பூட்டு

தல். (கதிரை. அக.)

அனுசந்தி'-த்தல் 11 வி.

1.சிந்தித்தல்,

மனத்தில்

எண்ணுதல். அந்த அண்ணிமையை அனுசந்தித்து இனியளாம் (பெரியதி. 2, 7, 6 தமிழாக். ப.511). பின்பு உள்ளாரும் அனுசந்தித்து ஈடுபடும்படி ஆயிற்று ( யதீந்திரப். ப.24). 2.சொல்லுதல், ஓது தல். பன்னீராயிரம் உரு அனுசந்தித்தால் (குருபரம்.

பன். ப. 171).

அனுசந்தி 2- த்தல் 11 வி. கண்காணித்தல், கண்காணித்தல், மேற்பார்வை புரிதல்.... கங்காணியும் இவன் உறவுமுறையாரே நின்று அனுசந்திக்கக் கடவர்களாகவும் (தெ.இ.க

17, 453).

அனுசயப்படு-தல் 6 வி. ஐயுறுதல். அனுசயப்பட்டு அது இதுவென்னாதே (தேவா. 5,65,6).

அனுசயம்! பெ. 1. வழக்காடுகை. எங்கள் காணி யென்று அனுசயம் பண்ணின படியாலே (தெ.இ. க.7 ப.385).2. பெரும்பகை. அனுசயம் நெடும் பகை (நாநார்த்த.426).

...

அனுசயம்' பெ. ஐயம். அனுசயப்பட்டு அது இது என்னாதே (தேவா. 5,65,6).

அனுசயம்' பெ. (அணி.) செய்யுளில் இரக்கவுணர்வு தோன்றச் செய்வதான அனுசயத் தடைமொழி அணி. (வீரசோ. 161 உரை)

அனுசயம்' பெ. கழிவிரக்கம். (த.த.அக.)

அனுசயம்' பெ. பற்று. (சங். அக.)

அனுசயம்' பெ. பின்னிணைப்பு, அனுபந்தம். அனு சயம் அனுபந்தப்பேர் (நாநார்த்த. 426).

...

அனுசரணம் (அனுசரணை) பெ. 1. சார்ந்தொழுகுகை. (கோயிலொ. 13) 2. (அறிவி.) விலங்கினம் சூழ் நிலைக்கு ஏற்ப உடலமைப்பை மாற்றிக் கொள்ளுகை. (இயற்கை. க. சொ.ப. 141)

2.

அனுசரணை (அனுசரணம்) பெ. 1. சார்ந்தொழுகுகை, பின்தொடர்கை. (கதிரை. அக.) உதவி. மிகுந்த குற்றத்தைச் செய்தவன் அரசரின் வாயில் காப்போன் அனுசரணையால் தீர்த்துக்கொள்ளு தல் கூடாது (கொலைமறு. 12 உரை). யார் இப்போது வயதான தாயாருக்கு அனுசரணையாய் இருப்பது (பே.வ.).