பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/681

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனுசரன்

அனுசரன் பெ. தோழன், பணியாள். செக்கர் மணி வைகுந்த முகில் தேர்ப்பின் தொடரும் அனுசரனே (ஞான. உபதேசகா. 2124).

...

அனுசரி'-த்தல் 11 வி. 1.பின்பற்றுதல். காந்தியடி களின் கொள்கையை அறிஞர்கள் அனுசரித்தனர் (செய்தி.வ.). வேதந்தன்னை அனுசரித்திடுகையாலே பிரமாண மாகும் தரும சாத்திரங்கள் (இருசமயவி. பரமார்த்த, 5). 2. (கொள்கையை) ஒட்டிப்போதல், ஏற்றல். அனுசரிக்கக் கூடாது ஆரியமாலை தன்னை (காத்தவரா.ப.111). அவர் சொன்னதை அனுசரித்துப் பேசுகிறான் (பே.வ.). 3.நாடிச் செல்லுதல். வண்டு அனுசரிக்கும் பூவை (நீதிசாரம் 46). ஒவ்வொரு சம்பவமும் இதை அனுசரித்தே நடந்தாக வேண்டும் (தினசரி. ப. 28).

அனுசரி-த்தல் 11 வி. 1. வழிபடுதல். (வின்.) 2. கொண்டாடுதல். (முன்.) 3. ஆமோதித்தல். (த.த.அக.)

அனுசரிப்பு பெ. 1. பின்பற்றுகை. (கதிரை. அக.) 2. இணக் கம். (செ. ப. அக.)

அனுசன் பெ. தம்பி, இளையவன். அஞ்சனவண்ண னுக்கு அனுசன் கூறுவான் (கம்பரா. 4, 10, 111), அனுசனை யுற்று நோக்கி (வரத.பாகவத. சாம்பவதி. 8). சீதை அனுசனொடு சீராமர் இன்பமுறு கோயில் திருவனந்தை விலா. 244).

அனுசாகை பெ. கிளைக்குள் கிளை. (தெ.இ.க.2 ப.

201)

அனுசாசனம் பெ. அறிவுரை, உபதேசம். அனுசாசன பருவம் (அரங்க. பாரதம் - பருவத்தலைப்பு).

அனுசாதன் பெ. தம்பி. (கதிரை. அக.)

அனுசாதை (அனுசை ) பெ.தங்கை.

(முன்.)

அனுசாமந்தன் பெ. அரசனால் நூறு கிராமங்களுக்குத் தலைவனாக நியமிக்கப்பட்டவன். (சுக்கிரநீதி 1,191)

அனுசாரணை பெ. வீணையின் பக்க நரம்பு. (செ.ப.

அக.)

அனுசாரம்' பெ. கிரக வக்கிரம் (கோள் பின்னோக்கிச் செல்லுங்கதி). (முன்.)

அனுசாரம்' பெ. ஒத்தபடி. கர்மானுசாரம் (பே.வ.).

அனுசாரம்' பெ. வழக்கம். (கதிரை. அக.)

5

51

அனுசாரம்' பெ. தருவிப்பு. (முன்.)

அனுசாரம்' பெ. தன்மை. (முன்.)

அனுசூதன்

அனுசாரம்' பெ. தத்துவம். (முன்.)

அனுசாரம்' பெ. தொடர்பு. (முன்.)

அனுசாரி பெ. 1. பின்பற்றுவோன்.

நேசானுசாரி

யாய் விவகரிப்பேன் (தாயுமா.2, 1). 2. சீடன். (செ. ப. அக. அனு.) 3. வழிபடுவோன். (கதிரை. அக.) 4. உதவியாள். (முன்.)

அனுசிதம் 1 பெ. 1. செய்யத்தகாதது. நாதன் அடி வணங்கச் சென்ற யானை அனுசிதம் என்று அத னைச் சிதைக்க (பெரியபு. 68,4). 2. முறையற்றது, மரியாதைக் குறைவு. சமணர் தாங்கள் முன்னமே பிள்ளையார்பால் அனுசிதம் முற்றச் செய்தார் (பெரியபு. 28,853).3. பொருத்தமற்ற செயல். அனு சிதமாய் சாண்வயிறு வளர்க்க வாயலைந்தேன் (கிருட்டிணகர். 4).

...

அனுசிதம்' பெ. பொய். மடிவு வஞ்சம் மாயம் அனு சிதம் பொய்யின் கூற்றே (திவா. 2019).

...

அனுசிதம்' பெ. 1. கெடுதி. இதுக்கு அனுசிதம் பண்ண நினைத்தார் (தெ. இ. க. 7, 393). 2. (உடலுக்கு ஏற்காது) வாந்தி செய்கை. அனுசிதம்சத்தி (உரி.

. 8, 3).

அனுசிதன் பெ. பொருத்தமில்லாத செயல் புரிபவன். அனுசிதன் விபரீதன் (திருப்பு. 123).

அனுசிந்தை பெ. தியானிக்கை. (கதிரை. அக.)

அனுசீவகன் (அனுசீவி) பெ. பணியாள். (முன்.)

அனுசீவி (அனுசீவகன்) பெ. பணியாள். (முன்.)

அனுசுருதி பெ. ஒத்த சுருதி. அனுசுருதியேற்றுதல் தைவரல் (சீவக. 657 நச்.).

அனுசூதம் பெ. இடைவிடாதது, இணைந்திருக்கை. அனுபூதி அனுசூதமும் (தாயுமா. 6, 1).

அனுசூதன் பெ.விடாது தொடர்ந்திருப்பவன். சொற்ற அவத்தைகளி லனுசூதனா யறியும் துரியனே உளன் (வேதா.சூ. 99).