பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/683

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனுத்தியோகம்

அனுத்தியோகம் பெ. முயற்சியின்மை. (கதிரை. அக.)

அனுத்திரபஞ்சமம் பெ. ( இசை ) குறிஞ்சியாழ்த்திறனில் ஆறாம் திறனின் முதற்பிரிவாகிய அகநிலையில் உள்ள ஐம்பத்தேழு என்ற எண்கொண்ட பண். நட்ட பாடை அனுத்திரபஞ்சமம் ... இவை முப்பத்திரண்டும் குறிஞ்சி யாழ்த்திறமாகக் கூறுவர் (பிங். 1382).

அனுத்துருதபஞ்சமம் பெ.

த. அக.)

அனுதபி-த்தல்

அனுத்திரபஞ்சமம். (த.

(அநுதபித்தல்) 11 வி. 1. கழிந்த தற்கு வருந்தி இரங்குதல். எங்கள் தப்புக்கு அனு தபித்தோம் (திருப்பா.28 ஆறா. ப. 412), 2, பிறர் துக்கங்களில் அவரோடு பங்கு கொள்ளுதல். (செ. ப. அக.)

அனுதரம்1 பெ. 1. கப்பற் பயணத் தொகை. (புதுவை வ.) 2. படகேறுதல். (கதிரை. அக.)

அனுதரம்' பெ. மெலிவு. (முன்.)

அனுதரி'-த்தல் 11 வி. பாதுகாத்தல், ஆதரவாக இருத் தல். இவ்வூர் நன்மைதின்மைகள் அனுதரிக்கும் இடத்து ... (தெ.இ.க. 7, 765).

அனுதரி 2 - த்தல் 11வி. படகேற்றுதல். (கதிரை. அக.)

அனுதரி'-த்தல் 11 வி. மெலிதல். (முன்.)

அனுதாத்தம் பெ. (இசை) (கீழ் இறக்கமாக ஒலிப்பது) படுத்தலோசை. தாழ உச்சரிக்கிறது அனுதாத்தம் (சிவதரு.10,83 உரை). உதாத்தம் ஓசை அனுதாத்தம் சொரிதம் தழுவ ஓதி (திருவிளை. பு. 4, 8).

அனுதாபம் பெ. 1. (இழப்பால் வருந்துவோர் பால் பிறர்காட்டும்) இரக்கம், பரிவு. அவர் காலமான செய்திகேட்டு அவர் வீட்டுக்குச் சென்று அனு தாபம் தெரிவித்தோம் (நாட். வ.). 2. கழிந்த தற்கு இரங்குகை, பின்னிரக்கம். (செ. ப. அக.) 3. பிறர் சுகதுக்கங்களில் அவரோடு ஒன்றுகை, ஒத் துணர்கை. (கிறித்.வ.)

அனுதாரம்1 பெ. காப்பு, ஆதரவு. இவர்கள் அனு தாரத்திலுள்ளார் பக்கல் நின்றும் ஓலையாகில் ஆளாகில் வந்தால் (தெ. இ.க. 8 ப.54).

அனுதாரம்' பெ. இல்லொழுக்கம். (கதிரை. அக.)

அனுதாரம்' பெ. பிசுனித்தனம், உலோபம். (முன்.)

553

அனுப்படிபாக்கி

அனுதானம்

அனுதினம்

பெ. (இசை) தாளவகை. (பரத. 3, 4)

வி. அ. நாள்தோறும், எப்போதும். அனுதினம் இறைஞ்சிய வடுக்கண்டோம் (நந்திக் கலம். 37). சரவண பவனே என்று அனுதினம் மொழிதர (திருப்பு. 53). அனுதினம் அரன் புகழ் சாற்று. சைவபுராண நூல் (திருவிளை. பு. 34, 4). அனுதினமும் மனதில் நினை தரு ... அறப்பளீசுர தேவனே (அறப்பளீ. சத. 1). அவியுணவை அனு தினம் விழைந்து (திருமலை முரு.பிள்.92). நுண்மை யுடன் அனுதினமும் இருத்தியென்று இருத்தியென்று (ஞான. உப தேசகா. 1159). பூவால் நீரால் அனுதினமும் போற்றப்பெற்றேன் (குளத்தூர். பதிற். அந். 14). அனு தினமும் இலக்கியமும் ... அளிக்கும் (குருகூர். பவனி. காப்பு 2). உனது பாதத்தை அனுதினம் புகழவைப் பாய் (தோத்திரத்திர. மகாசாத். 4). அனுதினமும் அழுதழுது மெலிவதல்லாமல் (சிவஞானதேசி. திரு வருட். 27). நல்லறிஞர்தமை அனுதினம் போற்று வேன் (பாரதி. சுயசரிதை 1, 44).

அனுதினாதினம் வி.அ.

நாள்தோறும்,

எப்போதும். நான் அனுதினாதினமுமே நினையவே (திருப்பு.130).

அனுதுருதம் பெ. (இசை) ஓர் அட்சரகாலம் கொண்ட தாள அங்க வகை. (பரத. 3,35)

அனுநாசிகம்

(அனுநாசிகை)

பெ. (இலக்.) மூக்

கொலிகளான மெல்லெழுத்துக்கள். மெல்லினம் அனு நாசிகம் (பிர.வி. 5 உரை).

அனுநாசிகை (அனுநாசிகம்) பெ. (இலக்.) மெல்லி னம். (கதிரை. அக.)

அனுநாதம் பெ. எதிரொலி. (செ. ப. அக. அனு.)

அனுப்படி 1 பெ. 1.கையிருப்பு. .(செ.ப. அக.) 2. கோயில் கணக்கில் முன்பக்கத்துத் தொகையை மறு பக்கத்தில் காட்டக் கூட்டியிடும் தொகை. (கோயில் வ.) 3. சென்ற ஆண்டின் வருவாய். (இராமநாத. வ.)

அனுப்படி 2 பெ. செயல்கள். அனுப்படி விசாரிக்கிறது

(செ. ப. அக.).

அனுப்படி

பெ. கருமச்செய்திகள், கருமச்சூழ்நிலைகள்.

(செ. சொ. பேரக.)

அனுப்படிநிலுவை பெ. கையிருப்பு. (முன்.)

அனுப்படிபாக்கி பெ. கையிருப்பு. (வட்.வ.)