பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/685

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனுபந்தன் 1

அனுபந்தன் 1 பெ. உடன்படுபவன். காயும் அவர்க்கு அனுபந்தருமாய் உள் களித்தீரே (சிவதரு. 7, 195). அனுபந்தன் 2 பெ. குழந்தை. (கதிரை. அக.)

அனுபந்தன்' பெ. மாணாக்கன். (முன்.)

அனுபந்தி பெ. 1. விக்கல். (நாநார்த்த. 426) 2.தாகம்.

(முன்.)

அனுபபத்தி பெ. பொருத்தமின்மை. அதற்குப் (அனுப பத்தி) பொருள் பொருத்தமின்மை (பிர. வி. 47

உரை).

அனுபம பெ. மிகுதியும் நீர்ப்பாங்கான நிலம். (கதிரை. அக.)

அனுபமன் பெ. ஒப்பில்லாதவன், உவமையில்லாதவன். நண்ணாதார் ஆனவரைக் கொன்றாய் அனுபமா (பெருந். 795). அனுபமன் செழியன் மாறன் (திருவால. பு. 13, 15). தமிழ்த்துறையான் அனுபமன் தொண் டையர்கோன் (கப்பற்கோ. 99).

அனுபமை' பெ. ஒப்பில்லாதது. (சங். அக.)

அனுபமை2 (அனுபை) பெ. தென்மேற்குத்திசையானை யின் பெண்யானையாம் குமுதம். (அபி. சிந்.)

அனுபல்லவி பெ. ( இசை ) இசைப்பாட்டில் பல்லவியில் பயிலும் இசையை மேலும் வளர்த்துக் காட்டுவதாகிய இரண்டாம் உறுப்பு. தானவர்ணத்தில் பல்லவி அனு பல்லவி சரணம் முதலியவற்றிற்கு மாத்திரமே சாகித்தியம் இருக்கும் (சங்கீதசா. 1 ப, 50).

அனுபலத்தி பெ. 1. அறுவகை அளவையுள், ஒன்று இல்லாமையால் மற்றொன்று இல்லாமையை அறிவ தாகிய ஊகம். அனுபலத்தியது சீதமின்மை பனி யின்மை காட்டல் போலும் (சி. சி. 15). 2.அறி யப்படாமை. (சங். அக.) 3 (அணி.) அனுபலத்தியலங் காரம் என்னும் நுகர்ச்சியின்மை அணி. (குவலயா. 113)

அனுபலத்தியேது பெ. அனுபலத்தி என்னும் அளவை. இயல்பு ஏது என்றும் காரிய ஏது என்றும் அனு பலத்தியேது என்றும் சொல்லப்பட்ட ஏதுக்கள் (சி. சி. அளவை. 10 மறைஞா.).

அனுபவக்காட்சி

(செ.ப. அக.)

பெ ஐம்புலன்களால் அறியும் அறிவு.

555

அனுபவி-த்தல்

அனுபவசாலி பெ. வாழ்க்கையில் பலதுறையில் ஈடுபட்டு அறிவு பெற்றவன், பட்டறிவுடையவன். அனுபவசாலி சொல்வதைக் கேள் (பே.வ.).

அனுபவசைதன்னியம் பெ. அனுபவத்தால் பெற்ற அறிவு. பேய்க்குச் சான்று பிடியுண்டவனேயானாற் போல உண்மையாகிய சிவா னுபவ சைதன்னியமே அதற் குச் சான்று (களிற்று. 10 உரை).

...

அனுபவம் பெ. 1. (வாழ்க்கையாலும் உய்த்துணர்ந் தமையாலும் கல்வியாலும் பெறும்) நுகர்ச்சித் தொகுதி. அனுபவம் இது சற்றும் விடவோ அறி யேன் (திருப்பு. 243). சாற்று சிவம் அனுபவம் அப்பிரமாணம் என்று ஆகமம் சொல் இலக் கணங்கள் (சிவப்பிர. விகா. 57). இமையோர் மெய்த்து அனுபவம் உதவுவர் (இரகு. திக்கு. 86).ஒரு சொல் படியே அனுபவத்தைச் சேரீர் (தாயுமா. 28,10). யுக முடிவின் அனுபவம் எங்ஙனம் இருக்கும் என் பதை அறிந்து (பாரதி. வசனகவி. 3, 2). பாடாண்ட மதஅனுபவங்கள் தமை தள்ளும் தமிழாயிரம் (நூற்றெட்டு. திருப்பு. 7). தமிழறி புலவர்கள் அனுபவ முதுமுறை தந்தருள் பைங்குழவீ (கம்பன்பிள். 2, 8). 2. பயன்பாட்டு உரிமை. அந்த வீடு அவன் அனுப வத்தில் இருக்கிறது (செ. ப. அக.).

...

அனுபவவிதி பெ. முறையான நூற்பயிற்சியில்லாது அனு பவத்தையே அடிப்படையாகக் கொண்டவிதி. (கலை.

அக. 1 ப. 17),

அனுபவவைத்தியம் பெ. நோய்க்குரிய மருத்துவம் இன் னது என்பதனைப் பழக்கத்தால் அறிந்து அதனைப் பின்பற்றும் மருத்துவமுறை. (நாட்.வ.)

அனுபவாதீதம் பெ. பட்டறிவுக்கு அப்பாற்பட்ட நிலை. அனுபவாதீதமிடமாக நிற்கின்ற ஆனந்த போத ரானவர்களே (களிற்று. 8 உரை).

அனுபவாரூடம் பெ. பட்டறிவை அடிப்படையாகக் கொண்டு சிறப்புற்ற நிலை. (செ. ப. அக. அனு.)

அனுபவித்தல் 11 வி. 1.இன்பம் நுகர்தல். இன்ப நிலம்-அனுபவிக்கும் துறைகள் (சீவக. 849 நச்.). திரு வனந்தாழ்வான் மேலே இடத்திலே அனுபவிக்க மனோதிக்கிறார் (பெருமாள்தி. 1 வியாக். ப. 9). சாத னையைப் பயின்று பேரின்பத்தை அனுபவி (தினசரி. ப. 37). 2. (நன்மைதீமை முதலியன தன்வாழ்க்கை யில்) உணர்ந்தறிதல். இச்சாபம் அனுபவித்தல்லது விடாதால் (சிவஞா. காஞ்சி. அரிசா. 15). அனுபவித்