பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/687

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனுபோகம்2

அனுபோகம் பெ. பழக்கம், பயிற்சி. (சங். அக.)

அனுபோகி1-த்தல்

11வி. 1. இன்பம் நுகர்தல் (அனுபவித்தல்). அன்னை தந்தை இருவருந்தான் அனுபோகிக்க (ஞானவெட்டி. பாயி. 24). 2. உரிமை யாகப் பெறுதல். அனுபோகியுங்கோள் என்று எழுதி (தெ.இ.க.8,38).

அனுபோகி' பெ. இன்ப நுகர்ச்சியுடையவன்.

லோகமெலாம் அனுபோகி (திருப்பு. 673).

திகை

அனுமக்கொடி பெ. அனுமன் உருவம் பொறித்த அரசர் கொடி. தார் மன்னர் பெற்றது அனுமக்கொடி (தெ.

இ.க.12,265).

அனுமக்கொடியோன்

பெ.

(அனுமக்கொடியுடைய)

அருச்சுனன். (செ.ப.அக.)

அனுமச்சா பெ. பொன்னாங்காணி. (வாகட அக.)

அனுமஞ்சீவி பெ.

தொ.)

அமிர்தசஞ்சீவிச்செடி.

(மரஇன.

அனுமத்தோடி பெ. (கருநாடக இசையில்) எட்டாவது மேள கர்த்தா ராகம். (அபி. சிந்.)

அனுமதம்1 பெ. அனுமனுக்குரிய வீணை. அனுமதம் அனுமாருக்கும் இராவணாசுரம் இராவணனுக்கும் உரியனவாம் (பரத. 4, 15 உரை).

அனுமதம்' பெ. அனுமதி. ஆசற்று நிறைவேற அனுமதம் செய்கென அறைந்தே (சிவதரு. 2, 27). கடவுளை வழிபட்டு அனுமதங் கொடு (உத்தரகோ

4. 5, 24).

அனுமதி பெ. 1. உடன்படுகை, அனுமதி பெற்று (சேதுபு. சேதுயா. 15). இராவணன் தனது அனுமதி யால்... திரிசிரன்... அங்கிருந்தான் (செவ்வந்திப்பு. 6, 4). பெற்றவன் தன் அனுமதியைப் பிரிந்து அந்த எல்லையினை உற்றனர்கள் (கமலாலயச். 567). வெம் பாலை செல்ல அனுமதி (சங்கர. கோவை 309).2. வெளிநாடு செல்லுதற்கோ, ஒரு மனுவிற்கோ அரசு தரும்) இசைவு. வெளிநாடு செல்ல அனுமதி கிடைத் தது (பே.வ.). புதிய நியமனத்திற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது (செய்தி.வ.). 3. உபதேசம். சற்குர வன் அனுமதியாய் அகண்டிதமாம் இரும்போகங்

கள்

1161).

அன்றுமுதலாய்த்துய்த்து (ஞான. உபதேசகா.

557

அனுமரணம்

அனுமதி2 பெ. 1. (சதுர்த்தசியோடு கூடிய) முழு நிலவு, பூரணை. அனுமதி பவ்வம் பூரணை... (பிங். 295). 2. சதுர்த்தசி. (கதிரை. அக.)

அனுமதி 3 பெ. புல்வகை. (முன்.)

அனுமதி - த்தல் 11 வி. 1. இசைவு தருதல், விடுதல். மனதை விருப்பம் போல் திரிய அனுமதியாதே (தினசரி, ப. 18). யார் இவரை உள்ளே வர அனு மதித்தது (பே.வ.). 2. (இக்) (மருத்துவமனை முதலியவற்றில்) சேர்த்தல். நோயாளியை உடனே அனுமதிக்கத் தாமதமாயிற்று (முன்.).

அனுமதிச்சீட்டு பெ. 1. அலுவலகம் முதலியவற்றுள் செல்வதற்குக் கொடுக்கும் இசைவுச்சீட்டு. (நாட். வ.) 2. ஊர்தியில் செல்வதற்குக்கொடுக்கும் பயணச்சீட்டு. (வணிகவரித். க. சொ.) 3. தொழில் முதலியன தொடங்கு வதற்கு அரசு தரும் இசைவு ஆவணக் கடிதம். (முன்.)

அனுமதிப்பத்திரம் பெ. (இறக்கும் தறுவாயில் கண வன் மனைவிக்குக்) குழந்தை தத்தெடுத்துக் கொள் ளக் கொடுக்கும் உரிமை. (செ.ப.அக.)

அனுமதுவசன் பெ. (காப்.) (அனுமக்கொடியுடைய) அருச்சுனன். கண்ணன் மைத்துனன் துவசன் (நாம.நி.145).

அனுமந்தச்சம்பா பெ.

...

அனும

(முற்காலத்திலிருந்த) சம்பா

நெல்வகை. (ஏரெழு. உரை)

அனுமந்தரம் பெ. மந்தரத் தந்திக்குத் துணையாயுள்ள நரம்பு. (செ.ப. அக. அனு.)

அனுமந்தராயன் பெ. (காப்.) அனுமன். (செ. ப . அக.)

அனுமந்தவிருசு பெ. ஆகாசவாண வெடிவகை. (செ.

ப. அக. அனு.)

அனுமந்தன் பெ. (காப்.) அனுமன். அனுமந்தன் அடித்தானே (இராமநா. 5, 17 தரு).

அனுமரணம் பெ. கணவனுடன் இறத்தல். பந்தமுற அனுமரணம் செய்த உருக்குமணி (நல். பாரத. முத்தி

யடை. 6).