பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/688

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனுமன்

அனுமன் (அனுமான்1) பெ. (காப்.) வாயுதேவன் மைந் தனும், சுக்கிரீவன் அமைச்சனும், இராமனின் தூதுவ னுமாக விளங்கியவன். நாமமும் அனுமன் என்பேன் (கம்பரா. 4,2,15). வீரத்து அனுமன் புயம் மீது ஏறு அரங்கன் (திருவரங். அந். 62).

அனுமன்றாதை பெ.

...

அனுமன் தந்தையாகிய வாயு

தேவன். அனுமன் றாதை வீமன்றாதை மான் காற்று (நாம.நி.90 உரை).

...

பவ

அனுமனி-த்தல் 11 வி. ஒலித்தல், கனைத்தல். சரி கம பதநித் தக அனுமனியா வரு மறைஅயம் (திரு வால. பு. 28, 49).

அனுமாசக்கா (அனுமாசாக்கா)

கண்ணிக் கீரை. (மலை அக.)

பெ. பொன்னாங்

அனுமாசகண்ணி பெ. பொன்னாங்கண்ணிக்கீரை. (செ.

ப. அக. அனு.)

அனுமாசாக்கா

(அனுமாசக்கா)

பெ.

பொன்னாங்

கண்ணிக் கீரை. (வைத். விரி. அக. ப. 25)

அனுமாதிசெய்-தல் 1 வி.

அனுமானத்தால் அறிதல்.

அனுமாதி செய்தலின் ஆன துரியமே (திருமந்.

2203).

அனுமான்1 (அனுமன்) பெ. (காப்.) வாயுதேவன் மைந்தனும், சுக்கிரீவன் அமைச்சனும், இராமனின் தூதுவனுமாக விளங்கியவன். ஆதித்தனைப் பழ மென்று பாய்ந்த அனுமானை நினைக்க (தக்க. 608 ப. உரை). பாய்ந்தானே அனுமான் (இராமநா. 5, 1 தரு). போய் அனுமான் பாய்ந்த புகழ் பொறாமல் (கூளப்ப. காதல் 68).

அனுமான்2

...

பெ. ஒரு சிற்ப நூல். (செ. ப. அக.) அனுமானப்பிரமாணம் பெ. (தருக்கம்) பொருளை அறி தற்குரிய அளவைகளுள் இரண்டாவதாகிய கரு தலளவை. அனுமானப் பிரமாணம் ... தானறிதற் பொருட்டனுமானமும் பிறர்க்கறிவித்தற் பொருட் டனுமானமும் என்றிருவகைப்படும் (சி. சி. அளவை. 4 முத்.உரை). அனுமதிப்பிரமாவின் கரணமாகிய இலிங்கத்தின் (ஏது) ஞானம் அனுமானப் பிர மாணமாம் (விசாரசந். ப. 484).

அனுமானபலன் பெ. நியாய விசாரணையில் ஐயுறுத

55

3

அனுமானாபாசம்

லால் (சந்தேகத்தால்) கிடைக்கும் நன்மை. (செ.ப.

அக.)

அனுமானம்1

உண்டு என்று

பெ. குறிகளினால் மூலப்பொருள் உறுதிப்படுத்தும் கருதலளவை. கருத் குறிக்கொள் அனுமானத்து அனு மேயத்தகைமை உணரும் தன்மையதாகும் (மணிமே. 27, 25-27). சினேந்திரபுத்தர்

தளவாவது

...

தமது திரு மேனியை விட்டு அக்குழி தூர்த்தார் என்பது ஆக மத்தாற் காட்டுவதல்லது அனுமானமுமாம் (தக்க. 183 ப, உரை). இம்மலை நெருப்புடையது புகை யுடைமையால், யாது யாது புகையுடையது அது நெருப்புடையது பாகசாலை

போல

பது ஓர் அனுமானம் (அனுமானவி. ப. 4).

அது

என்

அனுமானம்' பெ. (ஒரு பக்கமாகத் துணிய முடி யாத) உறுதியற்றநிலை. அனுமானமும் சங்கையும் சந்தேகமாகும் (பிங். 1883). ஆடினார் வியட் படைந்து அனுமானமுற்று அரசன் (திருவிளை. பு.

41, 61).

அனுமானம்' (அனுமானிதம்) பெ. குதிரைக்கனைப்பு. அனுமானமும் வாயில் விலாழியும் (தெய்வச். விறலி.

தூது 54).

அனுமானம் +

பெ.

ஐயுறவு. இனியிங்கு இதற்கும்

அனுமானமோ (தாயுமா. 38,1).

அனுமானவாக்கியம்

பெ.

அனுமானப் பிரமாணத்தால்

ஒருவன் அறிந்ததைப் பிறன் அறியும்படி உணர்த்தும் சொற்றொடர். (சங். அக.)

அனுமானவிருத்தம் பெ. பக்கப் போலியுள் ஒரு வகை. அனுமானவிருத்தம் கொளலாகும் (மணிமே. 29,

148).

...

அனுமானவுறுப்பு பெ. இந்தியத் தருக்கக் கூட்டின் ஐங் கூறுகள்; மேற்கோள் (பிரதிஞ்ஞை), ஏது, எடுத்துக் காட்டு (உதாரணம்), இணைப்பு (உபநயம்), முடிவு (நிகமனம்) என்பன. (தருக்க சங்.49/செ. சொ. பேரக.)

அனுமானாசனம் பெ. (அனுமான் + ஆசனம்) ஒரு யோகாசன முறை. (செ.ப.அக. அனு.)

அனுமானாபாசம்

பெ.

பொருந்தாத அனுமானங் கொண்டு ஒன்றை உறுதி பண்ணுகை. அநித்தியம் சத்தம் கண்ணால் காணப்படுகையினாலே என்கிற அனுமானாபாசம் (சி. சி. சுப. 19 மறைஞா.).