பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/689

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனுமானி'-த்தல்

அனுமானி'-த்தல் 11 வி. குறிகளினால் மூலப்பொருள் உண்டு என்று உறுதிப்படுத்தும் கருதல் அளவையால் அறிந்து உறுதிசெய்தல். பரசிவனுக்கு இவ்விசிட்டம் அளந்து அனுமானிக்கும் இயல்புடையதாகும் (சிவப்பிர விகா. 48).

...

அனுமானி '-த்தல் 11 வி.

1. (காரணகாரியத்

தொடர்பை ஆராயாது) ஊகம் செய்தல். (செ. ப. அக.) 2. மதிப்பிடுதல். (கலை. அக. 2 ப.79)

அனுமானி-த்தல் 11 வி.

அக.)

சந்தேகப்படுதல்.

(கதிரை.

அனுமானி '-த்தல் 11 வி. கனைத்தல். குதிரை அனு

மானித்தல் (அறப்பளீ . சத.63).

அனுமானிதம்

(அனுமானம்')

பெ. குதிரையின்

கனைப்பு. (கதிரை. அக.)

அனுமி -த்தல் 11 வி. அனுமானித்தல், காரியத்தால்

காரணமறிதல். (முன்.)

அனுமிதி'-த்தல் 11 வி.

ஊகித்தறிதல். தூயமதிஞர்

அனுமிதித்துச் சொல்லும் மருங்குல் தோகை (பிரபு.

லீலை 5, 37).

அனுமிதி' பெ. அனுமானத்தால்

உண்டாகும் அறிவு.

அனுமிதியாவது ஆராய்ச்சியால் தோன்றும்ஞானம் (தருக்கசங். 45),அனுமிதிப் பிரமாவின் கரணமாகிய இலிங்கம் (விசாரசந். 484).

...

அனுமூலம் பெ. காட்டுத்துளசி (மரஇன. தொ.)

அனுமேயம் பெ. அனுமானத்தால் அறியவருவது. அனு மானத்து அனுமேயத்தகைமை உணரும் (மணிமே. 27,26). அனுமேயம் அல்லான் (கிளி. தூது 7).

அனுமை1

பெ. அருத்தாபத்தி. (கதிரை. அக.)

அனுமை2 பெ. கண்ணின் புற அருகு. (முன்.) அனுமோனை பெ. (குறிலுக்கு நெடிலும் வல்லினத் திற்கு மெல்லினமும் போன்ற) இனவெழுத்தால் வரும் மோனைத்தொடை. (தொல். பொ. 406 பேரா.)

அனுயாத்திரை பெ. கோயிலிலிருந்து தெய்வத் திரு மேனியை எடுத்துப்போகையில் அல்லது பெரியோர் பயணத்தில் உடன்செல்கை. (செ. ப. அக.)

559

அனுலாபம்

அனுயோகம்1 பெ. (விவாதத்தில் எழுப்பும்) வினா. அனுயோகத்தையும் உத்தரத்தையும் புத்திபண்ணித் தொடையும் விடையும் முறைமையும் (புற. வெண்.

173 உரை),

அனுயோகம்' பெ. தண்டனை. பெ. தண்டனை. (கதிரை. அக.)

அனுயோகம்3 பெ. தியானம். (முன்.)

அனுயோகம் +

பெ. மன்றாடுகை. (முன்.)

அனுயோசனம் பெ. கேள்வி. (கதிரை. அக.)

அனுரஞ்சனம் பெ. அன்பு. (முன்.)

அனுரதி பெ. அன்பு. (முன்.)

அனுராகபோகம் பெ. காமானுபவம்.

(கதிரை. அக.)

அனுராகம் பெ. 1. அன்பு. உன்மத்தர் போல் பித்தே ஏறி அனுராகம் பொழியும் போது (திருவாய். 8, 8, 8). 2. காமவுணர்ச்சி. அனுராக போக மிகுமாதர் (பாரதம். 1, 1, 139). புட்குரற்கள் விட்டு அனுராகம் எழுப்பி (திருப்பு.224). ஆனந்த மயத்தனுராகத்தா யிழையைப் பார்த்து (செங்கோட்டுப்பு. 2,10,36).நல விற்பனமோடு அனுராக போகநலம் (சோழீ.மல். கோ. 76). 3.நட்பு. (சங். அக.) 4. தொடர் விருப்பு. அனுராகவல்லி மகமேருவில்லி (திருமலை. குற.31).

அனுராகமாலை பெ. கனவில் தலைவனது காமவுணர்ச்சி வெளிப்பாட்டைக் கூறும் முறையில் அமையும் சிற் றிலக்கியம். கனவினால் தனது இன்னல் வருணித்தல் அனுராகமாலை (பிரபந்த மர. 15).

அனுராதபுரம் பெ. இலங்கை (பண்டை)த்தலை நகரங் களுள் ஒன்று. (பெருந். 1204 தனிக் குறிப்பு)

அனுருகை பெ. புல்வகை. (சாம்ப. அக.)

அனுரூபம் பெ.ஏற்றது. தோன்றினர் கரும அனுரூப மாய் (சூத. சிவமான். 11, 14).

அனுரேசர் பெ. அனுராதபுரத்தரசர். இலங்கைநகர் ஆரியனைச் சேரா அனுரேசர் தங்கள் மடமாதர் (பெருந். 1204).

அனுரை

பெ. அனுராதபுரம். அனுரை என்று தம் பாடிவீடு விட்டு ஓடி (குலோத். பிள். 4). இலங்கை யில் அனுரையில் இராசையில் (பெருந். 938). அனுலாபம் பெ. கூறியது கூறல். (கதிரை. அக.)