பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/690

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

அனுலேபம்

அனுலேபம் பெ. 1. (மருத்) ஒற்றடம். (சித். பரி. அக. ப. 156) 2. (சமயம்) நீராட்டு, அபிடேகம். (கதிரை. அக.)

அனுலோமசன் பெ. உயர்குல ஆண் தாழ்குலப் பெண்ணை மணந்து பெற்ற பிள்ளை. (வின்.)

அனுலோமம்1 பெ. வலத்திசை. அனுலோமவிலோ மத்தால் வயங்க (சித். சிகா. விபூதிதா. 18).

அனுலோமம்' பெ. அனுலோமர் குலம்.(செ. ப. அக.)

அனுலோமம்' பெ. (இசை) கால அளவுக் கணக்கிடு வகை. (செ.ப.அக. அனு.)

அனுலோமமணம் பெ. உயர்குலத்திருமணம். (மானிடவியல்

க. அக. ப. 35)

...

அனுலோமர் பெ. உயர்குல ஆண் தாழ்குலப் பெண்ணை மணந்து பெற்ற பிள்ளை. உயர்ந்த ஆணினும் இழிந்த பெண்ணினும் பிறந்த கூட்டத்தவர் அனு லோமர் (திவா.2750) அனுலோமப் பிரதிலோ மரும் சங்கர சாதியும் (சீவக. 116 நச்.). அனுலோம ரொடு பிரதிலோமர் தங்கும் நத்தம் (அருணகிரிபு. 1,10). குலம் உயர் ஆணும் தாழ்ந்த குலமுறு பெண்ணும் கூடி அல மரப்பிறந்த மைந்தன் அனு லோமன் (சூத. சிவமான். 12, 6). இந்த நால்வரிடத் தெழும் அனுலோமரும் (கமலாலயச். 80). வருணா சிரமதப்பாற் பின்மருவு குலஞ்சேர் அனுலோமர் . மற்றுமுள்ள பெயர்கள் (ஞான. உபதேசகா. 1253).

...

அனுவசனம் பெ. பெ. ஒத்தவாக்கியம். (கதிரை. அக.)

அனுவட்டம் பெ.

ஒருவகை உருண்டை முத்து. ஏகா வல்லி ஒன்றிற் கோத்த பழமுத்து அனுவட்டமும் ஒப்புமுத்தும் (தெ.இ.க. 1,6).

அனுவதி-த்தல் (அநுவதி-த்தல், அனுவாதி-த்தல்) 11வி. (விளக்கும்பொருட்டு) மீண்டும் ஒருமுறை சொல்லு தல், வழிமொழிதல். இருவர் சொல் வழக்கு மேற் கொண்டு அனுவதித்து (திருவிளை. பு.39,30). தொடர்பு தோன்றக் கண்ணுருபை ஈண்டும் அனு வதித்தார் (நன். 302 சங்கரநமச்.).

அனுவர்த்தனம்' பெ. தொடர்கை. (சங். அக.)

அனுவர்த்தனம்' பெ.

பெ. இணங்குகை. (முன்.)

அனுவர்த்தனம்' பெ. கடமைப்படுத்தல். (கதிரை. அக.)

60

அனுவாரோகணம்

அனுவர்த்தனம்' பெ. பலன். (முன்.)

அனுவர்த்தனை

பெ. பழையகாலத்து வரிவகை.

(சென்னை. கல், அறி. 428,1913)

அனுவர்த்தி-த்தல் 11 வி. பின்பற்றுதல். பட்டரை மிக வும் அனுவர்த்திக்க (குருபரம். பன். ப.516). அனுவல்லிப்பூடு பெ. கஞ்சா. (மரஇன.தொ.)

அனுவழி பெ. (கலப்பு வழிப் பிறப்புடையவனாகக் கூறப்படும்) புதன் என்னும் கோள். அருணன் தூதுவன் அனுவழிமேதை ... புதன் என (திவா. 58).

அனுவாக்கியை பெ. வேதமந்திரம். (கதிரை. அக.) அனுவாகம் பெ. வேதத்தின் உட்பகுப்பு. (செ.ப. அக.) அனுவாசம்1 பெ. அன்பு. (கதிரை. அக.)

அனுவாசம்' பெ. கூடியிருத்தல். (முன்.)

அனுவாசம்' பெ. மணம் ஊட்டல். (முன்.)

917).

அனுவாதம் பெ. முன்னர்ப் பெறப்பட்டதனை விளக்கங் கருதிப் பின்னரும் எடுத்துக்கூறுகை. அதனை அனு வாதம் செய்தவனை நோக்கி (பெரியபு. 28, என்ப என்பதனைப் பின்னும் கூட்டி இருபொருள் பட உரைப்பின் அனுவாதமாம் (குறள். 739 பரிமே.). கூறின பின்னுங் கூறின சிலவவை அனுவாதம் என்றே அறிந்தே அடக்குக (இலக். கொத். 7).

அனுவாதவொத்தி பெ. ஒற்றியாக எடுத்த நிலத்தை மறுவொற்றி வைக்கை. (செ.ப. அக.)

அனுவாதி-த்தல் (அநுவதி-த்தல்,

அனுவதி-த்தல்)

11 வி. கூறியபின்னும் கூறுதல், கூறுதல், அனுவதித்தல். சொன்ன நூல் அனுவாதித்து (திருவிளை. பு. 4, 54).

அனுவாதி' (அனுவாதிசுரம்) பெ. (இசை) நட்புச்சுரம், இராகத்தின் அழகை அதிகரிக்கப் பயன்படும் சுரம். (தென் . இசை. ப.356).

அனுவாதிசுரம் (அனுவாதி') பெ. (இசை) நட்புச்சுரம். வாதிசுரத்துக்கு ... நண்பன் போல உதவிடும் சுரத் துக்கு அனுவாதி சுரம் என்பது பெயர் (முன்.

ப. 355).

அனுவாரோகணம் பெ உடன்கட்டை ஏறுதல். (கதிரை.அக