பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/691

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனுவிடம்

அனுவிடம் பெ. திமிங்கிலம். அவை பனைமீன் என்றும் யானைமீன் என்றும் மோங்கில் என்றும் அனுவிடம் என்றும் பெயருடையன (தக்க. 384 ப. உரை).

அனுவிரதம் பெ. அனுவிரதம், குணவிரதம், சிட்சாவிரதம், என்ற அருகர் விரதங்கள் மூன்றில் ஒன்று. (சிலப். 10, 181 உ.வே.சா. அடிக்குறிப்பு )

அனு

அனுவிருத்தசுபாவம் பெ. இயற்கைத்தன்மை. விருத்த வியாவிருத்த சுபாவங்களும் பொருளும் காட்ட வேண்டும் எனில், சமுத்திரம் என்னும் பொருளில் சலசுபாவமாகிய திரவியத்வ சைத்யா திகள் அனுவிருத்த சுபாவங்கள் (நீல. 380 உரை).

அனுவிருத்தம் பெ. இயற்கைப் பார்வை. (கதிரை. அக.)

அனுவிருத்தி! பெ. 1. தொடர்ச்சி. (சி. சி. 2, 60 சிவாக்.) 2.உடனிருக்கை. அனுவிருத்தியாய் இருக்கும் வகை யினால் வேதம் அவர்க்கு இன்று (சூத. எக்கிய, பூருவ,

19, 10).

அனுவிருத்தி' பெ. வழிபடுதல். (கதிரை. அக.)

அனுவிருத்தி' பெ. புறனடை. (முன்.)

அனுவுரு பெ. ஒத்த உருவம். பாண்டு மைந்தர் அனு வுருக் கொண்டு உருமாறி (பாரதம். 1, 5, 49).

அனுவெழுத்து பெ. 1. மோனையெழுத்து. (செ.ப.அக. அனு.) 2. இனவெழுத்து, கிளையெழுத்து. (செ. சொ.

பேரக.)

அனுற்பத்தி பெ. தவறு. (கதிரை. அக.)

அனுற்பத்தி 2 பெ. பிறப்பின்மை. (முன்.)

அனூகம்1

பெ. குலம். (நாநார்த்த. 437)

அனூகம்' பெ. ஒழுக்கம். (முன்.)

அனூகம்' பெ. கழிந்த பிறப்பு. (முன்.)

அனூகம் + பெ. ஏற்றுக்கொள்கை. (கதிரை. அக.)

அனூகம்' பெ. 1.கருவி. (மதுரை. அக.) 2.வில். (முன்.)

பெ. சொ. அ. 1-36.

56.

1

அனேகம்

அனூபகம் (அனூபசம்) பெ. இஞ்சி. (மரஇன. தொ.)

அனூபசம் (அனூபகம்) பெ. இஞ்சி. (முன்.)

அனூபம்1 பெ. 1.சதுப்பு நிலம். (செ.ப.அக. அனு.) 2.நீர் அருகுள்ள நிலம். (சங். அக.) 3. நீர்நிலை. (முன்.) 4. ஈரம். (முன்,)

அனூபம்' பெ.

எருமைக்கடா. (நாநார்த்த. 437)

அனூபம்' பெ. யானை. (கதிரை. அக.)

அனூரு1 பெ. 1. முடவன். (வின்.) 2. (காலில்லாத வனாகிய) அருணன். (சங். அக.)

2

அனூரு பெ. புதன். (வின்.)

அனேகதங்காபதம் (அனேகதங்காவதம்!) பெ. திருக் கேதாரத்திற்குத் தெற்கேயுள்ள பாடல் பெற்ற திரு நகர். (பெ. சி. அக.)

அனேகதங்காவதம்' (அனேகதங்காபதம்) பெ. திரு ஞான சம்பந்தரால் பாடப்பெற்ற வடநாட்டுச் சைவத் திருநகர் அனேகதங்காவதம் எந்தை வெந்த பொடிநீறு அணிவார்க்கு இடம் (தேவா. 2, 5, 4).

அனேகதங்காவதம்2 பெ. காஞ்சிபுரத்திற்கு அருகே அமைந்துள்ள பாடல் பெற்ற சைவத்திருநகர். அல்லி யிடைப் பெடை வண்டு உறங்கும் கலிக்கச்சி அனேகதங்காவதமே (தேவா. 7, 10, 8).

அனேகதம் (அனேகபம்)பெ. யானை.

...

யானை

உரித்த பிரானதிடம் . கச்சி அனேகதங்காவதமே (முன். 7, 10, 1).

அனேகபம் (அனேகதம்) பெ. யானை. அனேகப் மாம் ஆனை (ஆளவந். காஞ்சி. 336).

...

அனேகம்' (அநேகம்) பெ. 1. ஏகம் (ஒன்று) அல்லா தது. அனேகம் ஒன்றன்மை (நாநார்த்த. 430). 2. பல. அனேக காலம் தவத்துள் நின்று (தேவா. 4, 73, 4). அனேக பவங்கள் பிழைத்தன (திருவாச. 49, 5). அலகில் ஆனைகள் அனேகமும் (கம்பரா: 1, 14, 7). யானைமீது வரும் யானையும் அனேகம் எனவே (கலிங்.288). அனேகம் எதிர்வந்து நிற்கப் பாராமல் (கூளப்ப. காதல் 293). பறந்திடும் புரவிகள் அனேகம் (தோத்திரத்திர. சம்பந்தர் 2).