பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னை வாழ்க்கை 9盒

“கங்கை’, ‘கிராமராஜ்யம் முதலிய இதழ்களில் வெளிவந்தவை. 1962 இல் நூல் வடிவாயது.

கட்டுரை வகையைப் பார்க்கிலும் பிறிதொரு வகையால் கற்பார் நெஞ்சங்களைக் கவரத் தக்க ஒரு வகையில் வாழ்வியல் களே எழுத எண்ணினர் மு.வ. அதற்கு ஓர் அரிய உத்தியாக வாய்த்தது கடிதமுறை யாகும்.

கடித நூல்கள் :

வாழ்வில் கடிதத்திற்குச் சீரிய இடம் உண்டு. கடிதம் எவரையும் எதிர்நோக்கி இருக்கச் செய்யும்; ஆர்வத்தை எழுப் பிப் படிக்க ஏவும்; படித்த பின்னரும் பேணிக் காக்கவும் செய்யும். சில கடிதங்கள் பொன்னினும் சிறந்தனவாகப் போற்றப் பெறும். இத்தகைய ஆர்வ உத்தியை மு.வ. அரிதில் தேர்ந்து அருமை. யாகப் போற்றி ஐந்து நூல்களை அமைத்தார். அவற்றுள் நான்கு வாழ்வாங்கு வாழும் வாழ்வு நெறியை வனப்புறத் தீட்டிக் காட்டுவது. ஒன்று ஈழநாட்டுச் செலவு பற்றியது.

நேரு பெருமகனர் தம் மகளார்க்கு எழுதிய கடிதம் உலக வரலாறு ஆகியது; காரல் மார்க்ஸ், ஏங்கல்ஸ் என்பார் கடிதங்கள் செல்வமாக மதிக்கப் படுகின்றன. காந்தியடிகளார் கடிதங்கள் வழிகாட்டும் ஒளிவிளக்குகளாகக் கொள்ளப்படுகின் றன. மறைமலையடிகளார் இயற்றிய கோகிலாம்பாள் கடிதங்கள் இலக்கியமாக எண்ணப் பெறுகின்றன. கடித அமைப்பிலேயே கதை கூறும் நடைமுறையும் உண்டு. இவ்வனைத்தும் உணர்ந்து பல்லாற்றானும் பயன்படுத்தும் பான்மைக்கு மு.வ. கடித இலக் கியங்கள் சான்று பகர்வனவாம்.

கட்டுரை நூல்களினும்-ஏன்-கதை நூல்களிலும் கூடகடித நூல்களே மிகுதியாக விற்பனை யாயின என்னும் உண் மைச் செய்தி கடித இலக்கியத்தைச் சமூகம் எத்துணை வரவேற் கின்றது என்பதைத் தெளிவாக்க வல்லதாம்.

‘அன்னைக்கு’, ‘நண்பர்க்கு’, ‘தம்பிக்கு’, தங்கைக்கு’ என் பவை கடித நூல்களின் பெயர்கள். அன்னைக்கு அன்பு மகன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/103&oldid=586171" இலிருந்து மீள்விக்கப்பட்டது