பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o). பெருந்தகை மு. வ.

எழில் எழுதும் கடிதங்களாகவும், நண்பன் வளவனுக்கு நம்பி எழுதும் கடிதங்களாகவும், தம்பி எழிலுக்கு அண்ணன் வளவன் எழுதும் கடிதங்களாகவும், தங்கைக்கு அண்ணன் வளவன் எழுதும் கடிதங்களாகவும் முறையே இந்நூற் கடிதங்கள் அமைந் துள்ளன. மொத்தத்தில் இந் நான்கு நூல்களிலும் 33 கடி தங்கள் உள.

‘இது ஒரு நல்ல குடும்பம்; வளவன் எழில் இருவரும் உடன் பிறந்தவர்கள்; அன்னையும் தந்தையும் அறிவில் சிறந்த வர்கள்; பண்பாட்டைப் போற்றுபவர்கள். இவர்களின் குடும்ப நண்பன் நம்பி. அனைவரும் இந்த நூற்றாண்டில் பிறந்து வளர்ந் தவர்கள். இக்கால வாழ்வின் இன்ப துன்பங்களை நன்கு உணர்ந்தவர்கள். இவர்கள் எல்லோரும் கற்பனைப் படைப்புக் களே. ஆயினும் இவர்கள் உணர்வனவும் உரைப்பனவும் கற்பனை அல்ல. இவை இன்றைய இளைஞர் பலர் உணர்வன; உரைப்பன’ என்று நண்பர்க்கு’ என்னும் கடித நூலின் முன் ணுரையில் மு. வ. குறிப்பிடும் செய்தி இக் கடித நூல்கள் எழுந்த நோக்கினைத் தெள்ளிதில் விளக்குவதாம்.

‘குழந்தைக்கு உணர்ச்சி மிகுதி, தொழிலாளர்க்கு உணர்ச்சி மிகுதி பலம் குறைந்தவர்களுக்கு உணர்ச்சி மிகுதி; அடிக்கடி சினம் கொள்கிறவர்களுக்கு உணர்ச்சி மிகுதி; இவ்வளவு ஏன்? காட்டு மிராண்டிகளுக்கும் உணர்ச்சி மிகுதி; வறியவர்களுக்கும் உணர்ச்சி மிகுதி; ஆகையால் உணர்ச்சி சிறந்தது சிறந்தது என்று சொல்லி உணர்ச்சியைப் போற்றியது போதும் அம்மா! போதும். நாட்டின் நன்மையைக் கருதியாவது மூளை வளர்ச் சியைப் பெருக்க வேண்டும். மூளை, முன்னே தான் அழியாமல் காத்துக் கொள்ளவல்லது; பிறகு பிறருக்கும் உதவவல்லது’ என்று அன்னைக்கு மகன் எழுதும் செய்தி செந்தமிழ் நாட்டுச் சொத்தாக அமைந்திருந்தால் எத்துணை நன்மை பிறந்திருக்கும்! எத்துணைத் தீமை ஒழிந்திருக்கும் !

‘தமிழர்கள் நல்லவர்களாக மட்டும் வாழ்ந்தால் போதாது; வல்லவர்களாகவும் வாழவேண்டும்’ என்னும் மு. வ. வின் புகழ்

1. அன்னக்கு பக். 68-69.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/104&oldid=586172" இலிருந்து மீள்விக்கப்பட்டது