பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னை வாழ்க்கை 9:5

பெற்ற மணிமொழியொடு தொடங்கும் கடிதநூல் ‘நண்பர்க்கு: ஆகும். ‘தமிழ்மொழிக்கும் தமிழ் நாட்டுக்கும் துரோகம் சிெ. யாமல் எழுதினுல்தான் இங்கே செய்தித்தாள் பரவமுடியும் என்ற நிலையை மக்கள் ஏற்படுத்த வேண்டும். காசு கொடுத்து வாங்குவோரின் கைக்கு இந்த ஆற்றல் இருப்பதைக் காட்டி விட்டால் போதும்; அந்தச் செய்தித்தாள்கள் மறு வாரமே. திருந்தி விடும்; உடனே அவை நாட்டுக்கும் மொழிக்கும் பயன் படும் கருவிகளாக மாறி அமைந்துவிடும்’ என்று நம்பி உரைப் பதை நம்பிச் செயல்பட்டிருந்தால் தமிழ் நாட்டுச் செய்தித் தாள்கள் எவ்வளவு போற்றத் தக்கவையாக அமைந்திருக்கும்!

நான் சர்வாதிகாரியாக ஏற்பட்டால் திருக்குறள் ஒதா த. திருமணம் தமிழ் நாட்டில் செல்லுபடி ஆகாது என்றும், தேவாரம் திருவாசகம் பிரபந்தம் முதலான தமிழ்மறை ஒதாத கோயில்கள் தமிழ் நாட்டில் திறந்திருக்கக் கூடாது என்றும், தமிழில் உத்தரவு அனுப்பத் தெரியாத பட்டதாரிகள் தமிழ் நாட்டில் அதிகாரி களாக இருக்கக் கூடாது என்றும், தமிழ்நாட்டுக் கவர்னரும் தமிழில் கையெழுத்து இடவேண்டும் என்றும் ஆணையிடுவேன்’ என வளவன் கூறும் உரையை வளரும் இளைஞர் எண்ணிப் பார்த்திருந்தால் உணர்ச்சியை வெளிப்படுத்தி ஒழியாமல் செயல். பட்டிருந்தால் எத்தனையோ கேடுகள் ஒழிக்கப்பட்டிருக்குமே!

வளமான வாழ்வுக்கு வழிகாட்டும் நூலாக அமைந்தது தங்கைக்கு என்னும் கடிதநூலாகும். திருமணத்திற்கு முன்னி. ஒவ்வொரு பெண்ணும் ஓதியுணர வேண்டிய அரியநூல் தங்கைக்கு.

‘உங்கள் அன்பான இல்வாழ்க்கை வளர்பிறைபோல் வளரவேண்டும் என்று விரும்புகிறேன். அது என் வாழ்த்துதலில் இல்லை. நீங்கள் வாழும் முறையில் இருக்கிறது. 8

‘பசி எடுக்கிற வயிறு உள்ளவர்கள்தாம் வயிருரச் சாப்பிட முடியும். அடங்கி நடக்கிறவர்கள்தான் உரிமையின் நன் {{!}Ш, 5, Ш. அனுபவிக்க முடியும்.’

1. நண்பர்க்கு பக். 76. .ே தங்கைக்கு பக். 7. 2. தம்பிக்கு பக். 12 4. II. பக். 11.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/105&oldid=586173" இலிருந்து மீள்விக்கப்பட்டது