பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னை வாழ்க்கை 95

வரலாறு :

மு. வ. வின் படைப்பாற்றல் வெளிப்பட்ட மற்றாெரு துறை வரலாறு ஆகும். சான்றாேர் சென்ற நெறியைக் கற்றுக்கொண்டு அவர்கள் வழியில் செல்வதே முன்னேறுவதற்கு இயல்பான எளி தான வழி என்பது மு. வ. வின் தெளிவாகும். ஆகவே, தாம் எண்ணி எண்ணி உருகும், விரும்பி விரும்பிப் போற்றும் பெரு மக்கள் வரலாறுகளை எழுதினர். அவ்வாறு வெளி வந்தவை காந்தியண்ணல், கவிஞர் தாகூர் திரு. வி. க. அறிஞர் பெர் ஞர்ட்ஷா என்னும் நான் குமாம். பச்சையப்பர் வரலாறு நாடக அமைப்பில் வெளிப்பட்டது.

பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை என்னும் டாக்டர் பட்ட ஆராய்ச்சி நூலை அரும்பாடுபட்டு முடித்து 30-1-48ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று பல்கலைக் கழகத்தில் சேர்த்து விட்டு வீட்டுக்கு வந்தார் மு. வ. ஒரு பெரிய தலைச்சுமை இறங் கியது போன்ற நிறைவில் கட்டிலில் படுத்தார். மாலை மங்கி இருள் கவிந்துங்கூட மின்விளக்குகளைப் போடாமல் கண்ணை மூடிக் கொண்டு களைப்புடன் இருந்தார். அப்போது தெருவில் சிலர் பேசிச் சென்றதில் சுடப்பட்டார்’ என்ற சொல்மட்டுமே இவர் செவியில் வீழ்ந்தது. வெளியே வந்து கேட்டபோது நெஞ்சு நடுக் குறும் நஞ்சனைய செய்தியினைக் கேட்டார். நைந் தார்; கலங்கினர்; கண்ணிர் உகுத்தார். அண்ணல் காந்தியின் மறைவுச் செய்தியே அது. மு. வ. கொண்ட ஆற்றாமை *அண்ணல் காந்தி'யாக உருவெடுத்தது. காந்தியடிகளின் தூய்மை, தொண்டு, முற்போக்கு, உணர்வு, அடிப்படை ஆகிய பண்புகளை விளக்கி எழுதிய நூல் காந்தியண்ணல் ஆகும். அது 1948ஆம் ஆண்டில் வெளிவந்தது.

மு. வ. வின் உளம் நிறைந்த தலைவர்களுள் காந்தி யடிகளுக்குச் சீரிய இடம் உண்டு. அவர் வாழ்வையும் வாக்கை யும் மு.வ தம் எழுத்துகளில் மேற்கோள் காட்டியுள்ளவற்றைத் தொகுத்தால் அதுவே ஒரு தனி நூலாகும் பரப்புடையது. அன்னைக்கு எழுதும் கடிதத்திலே எழில் குறிப்பிடுகின்றன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/107&oldid=586175" இலிருந்து மீள்விக்கப்பட்டது