பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னை வாழ்க்கை 97

யிலேயே முகிழ்த்தது. வாழ்க்கைக்குச் சமயம் தேவை, கடவுள் தேவை’ என்று இளமை வரதராஜனர் பேசினர்; எழுதினர். கீழ்நாட்டு இளமை மேல்நாட்டு முதுமையை விஞ்சி நிற்கிறது’ என் கிறார். மேல்நாட்டு பெர்னர்ட்ஷா வரலாற்றைக் கீழ்நாட்டுப் பெர்ளுர்ட்ஷா எழுதிய காரணம் என்ன?

‘அறிஞர் பெர்ளுர்ட்ஷாவை நான் மதிப்பதற்குக் காரணம்: வாழ்க்கைச் சிக்கல் எதுவாயினும் அதை மேற்போக்காகக் கண்டு மருந்திட்டுச் செல்லாமல் அடிப்படைக் காரணம் கண்டு திருத்தும் ஆற்றல் அவருடைய எழுத்துக்களில் இருத்தலே ஆகும்’.

திரு. வி. க. வின் மேல் மு. வ. கொண்டிருந்தது அன்பாட பற்றா-காதலா? எல்லாமும் கூடிய ஒன்று என்பது தகும். மு. வ. ஞாயிறுதோறும் சென்று வழிபடும் தமிழ்க்கோயில் திரு. வி. க. மு. வ. எழுதிய வரலாற்றுப் புகழாளர்களுள் அணுக்கத்தொண்டராய் அடித்தொண்டராய் அறிவறிந்த தொண்டராய் அமைந்து கண்டும் கேட்டும் கலந்துரையாடியும் எழுதப் பெற்ற வரலாறுடையார் திரு. வி. க. வே. வரதராஜ ஞர் என் வீட்டுக்கு வருவர்; எனக்கினிய கனிகளைக் கொணர்வர்; அவர் என்னிடம் பேசிக்கொண்டே எனது அன்றாட வாழ்க் கையை ஆய்ந்துள்ளனர்’ என்கிறார். அவ் ஆய்வே திரு.வி.க. என்னும் நூலாகியது. --

‘திரு. வி. க. ஒரு வானம்பாடி; வெள்ளாடை சூழ்ந்த மெல்லிய உடலும் புலமைப்பொலிவு பெற்ற அழகிய முகமும் அருள் பெருகும் கூரிய விழியும் பெற்ற வானம்பாடி, தமிழ்நாட் டில் பிறந்த தமிழ் வானம்பாடி; சமரச வானம் கண்டு களிக்கும் வானம்பாடி தமிழகம் தழைக்க உலகம் உய்யப் பொதுமை மழை பெய்யுமாறு வாழ்த்துப்பாடும் வானம்பாடி’ என அந்த வானம் பாடியைப் பாடுகிறார் இந்த வானம்பாடி.

1. திரு. வி. க. வாழ்க்கைக் குறிப்புகள் பக். 804. 3. திரு. வி. க. பக். 4ே.

பெ. மு. வ.-7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/109&oldid=586177" இலிருந்து மீள்விக்கப்பட்டது