பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 பெருந்தகை மு. வ.

நல்ல கருத்துகளை ஏற்றுப் போற்றும் நயத்தகு நாகரிகர் மு. வ. என்பது இதல்ை விளங்கும். -

நூலின் முன்னுரைக்குப் பதிலாக, படிப்பவர்க்கு, படித்த வர்க்கு எனச் சில குறிப்புகளை வழங்கியுள்ளார் மு. வ. அதில் படித்தவர்க்கு என்பதில்,

‘அந்த முருங்கை மரத்திலிருந்து இரண்டு கிளிகள் ஒன்றன்பின் ஒன்றாக எழுந்து பறந்தன. அவை தென்னை மரத்தில் சென்று ஒலையில் மறைந்திருந்தன. உடனே சிறிது. நேரத்தில் வெளி வந்தன.

“காற்று ஆரவாரம் செய்தபோது இந்தக் கிளிகள் எங்கே. இருந்தனவோ தெரியவில்லை. இப்போது பழையபடி வந்து விட்டன. தென்னை மரத்தைச் சுற்றுகின்றன.

“ஆறு கிளிகள் இருக்கின்றன. ஆறு கிளிகள் - மூன்று: குடும்பம் - மூன்று இணை. எது எதன் துணையோ தெரியவில்லை. பொறுத்துப் பார்ப்போம் எப்படியும் தெரிந்துவிடும்’

எனக் குறிப்பிடுகிறார். திலகம், இளங்கோ, மருதப்பன், திரு. நாதன், செந்தாமரை ஆகியோரின் நேர்க் கூற்றாகச் செந்தா

மரை அமைந்துள்ளது.

கள்ளோ? காவியமோ :

மு. வ. வுக்குப் புனைகதை உலகில் நல்ல புகழ் வாங்கித். தந்த நூல்களுள் ‘கள்ளோ? காவியமோ?’ என்பதும் ஒன்று. அது செந்தாமரையை அடுத்து வெளி வந்தது. சென்னை அரசின் பாராட்டுப் பெற்றது இந்நூல்.

. கபிலரின் பாடலொன்று கிளறியதன் விளைவாக எழுந்த, இந்நூல், ‘உலகம் பொல்லாதது, அவர் நல்லவராக இருந்: தாலும் உலகம் பொல்லாதது’ என மங்கையின் கூற்றில் தொடங்கி, ‘அந்தக் குடும்ப விளக்கு அணைவதற்கு முன்னே ஒருமுறை அழகாக ஒளிவீசியது’ என்று அருளப்பன் கூற்றில் முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/118&oldid=586187" இலிருந்து மீள்விக்கப்பட்டது