பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 பெருந்தகை மு. வ

அந்தநாள் :

1941, 42 ஆம் ஆண்டுகளில் பர்மாவில் இருந்து ஓடிவந்த தமிழர் பட்ட அடுக்கடுக்கான துயரங்களை அவலச்சுவை பெருக எடுத்துரைக்கும் நாவல் அந்த நாள் ஆகும். இது முதற்கண் “தமிழ் முரசு’ வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது.

மலர்விழி:

மு. வ. வின் அடுத்த நாவல் மலர்விழியாகும். மலர்விழியில் வரும் கலைக்டர் செல்வநாயகம் மு. வ. வுக்குத் தொடர்புடைய

ஒரு பாத்திரமாகும்.

மலர்விழி நல்ல பெண்; அவள் இல்வாழ்வு கணவனின் கயமையால் கெடுகிறது. அவள் மீண்டும் கல்வியைத் தொடர்ந்து, ஆசிரியை ஆகிருள்; கல்விப்பணி புரிகிருள். கண்

கண்ட மணிமேகலையாகக் காட்சி வழங்குகிருள்.

செல்வநாயகம் கூறுகிறார்: ‘சிலருடைய மனம் பனைமரம் போன்றது. தன்னை நினைத்துக் கொண்டே நெடுக வளர்வது; -ஈவு இரக்கம் அற்ற தன்னல மனம்; சிலருடைய மனம் அறுகம் புல் போன்றது. எங்கெங்குப் பார்த்தாலும் பரந்து படர்வது. இரக்கம் உள்ள நல்ல மனம்; நல்ல மனங்கள் பெருகினல் உன்னைப் போன்றவர்கள் மிகுதியானல், வறுமைக்கே ஒரு முற்றுப்புள்ளி வைத்து விடலாம்.’

பெற்ற மனம் :

பெற்ற மனம் மு.வ. எழுதிய பெரிய நாவல்களில் ஒன்று. இஃது எழுதப்பெற்ற எட்டாண்டுகளில் திரைப்படமாக வெளி வந்தது. கதைக்காக நூலாசிரியர் ரூபா ஐயாயிரம் பெற்றார். அவர் வேண்டுகோட்படி திரு. வி. க. உயர்நிலைப் பள்ளிக்கு ரூபா ஐயாயிரம் நன்கொடை வழங்கினர். ‘வேலைக்காரனின் மனைவி, பைத்தியக் காரி, பிச்சைக்காரி, குழந்தை திருடி, அF5)I) யல்காரி, கொலைகாரி, குற்றவாளி, வேலைக்காரி எனப் பல்வேறு

1. மலர்விழி பக்- 140.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/120&oldid=586190" இலிருந்து மீள்விக்கப்பட்டது