பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னை வாழ்க்கை 111

நெஞ்சில் ஒரு முள் :

அறியாமல் தவறு செய்துவிட்டுப் பின்னர்த் திருந்தி வாழும் முயற்சி மேற்கொண்ட நல்லவள் ஒருத்தியின் வாழ்வை விவரிக்கும் நூல் நெஞ்சில் ஒரு முள்ளாகும். மு. வ. வின் நாவல்களில் இதுவே மிக நீண்ட நாவலாகும்.

‘கெட்டது வாழாமலே அழிய வேண்டும் என்றும், நல்லது வாழ்ந்து அழிய வேண்டும் என்றும் படைப்பு உணர்த்துகிறது. நல்ல உயிர்கள் அழிவது, மலர் மலர்ந்து மணம் கமழ்ந்த பிறகு வாடி உதிர்ந்து அழிவதைப் போன்றது. அதற்காக வருந்த வேண்டியது இல்லை. வாடி உதிர்ந்த மலர் அழுகி மண்ணுகி மறு படியும் ஒரு செடிக்கு உரமாகும். அதுபோல் நல்லோர் வாழ்ந்து அழிந்த பிறகு நன்மை மறுபடியும் தழைப்பதற்கே பயன்படுவர்’. இத்தகைய வாழ்வியற் கருத்துகள் பல வற்றை விளக்கும் நூல் நெஞ்சில் ஒரு முள்ளாகும்.

அகல் விளக்கு :

தில்லி சாகித்திய அகாதெமிப் பரிசான ஐயாயிர ரூபா பெற்றது ‘அகல் விளக்கு என்னும் நாவலாகும். மு.வ. வைப் படிக்க விரும்புவோர் முதலில் படிக்க வேண்டிய நூல் அகல் விளக்கு’ என்பர். -

வேலய்யனின் நினைவோட்டமாக இந் நாவல் புனையப்பட் டுள்ளது. சந்திரன் அகல் விளக்கின் கதைத் தலைவன். அவ னுடைய தொடக்ககாலச் செழிப்பு மிக்க வாழ்வினையும், அவலத் திற்கு இடமான இறுதிக்கால வாழ்வினையும் படம் பிடித்துக் காட்டும் நூல் அகல் விளக்கு.

‘நீ மண் அகலாக இருந்த காலத்தில் நான் பித்தளை அக லாக இருந்தேன். சிறிது காலம் பளபள என்று மின்னினேன். என் அழகையும் அறிவையும் அப்போது எல்லோரும் விரும்பி ஞர்கள்; பாராட்டினர்கள். என்ன பயன்? வரவர எண்ணெயும்

1. நெஞ்சில் ஒரு முள். பக். 585. 2. டாக்டர் மு.வ. வின் நாவல்கள். பக். 17.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/123&oldid=586193" இலிருந்து மீள்விக்கப்பட்டது