பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னை வாழ்க்கை 113

ஒவ்வொருவருக்கும் உடல் உறவும் உள்ளத்து உறவும் உண்டு. உடலால் உறவானவரை விட உள்ளத்தால் உறவான வரையே திருத்த முடியும். உலகத்துச் சான்றாேர் சிலர் மனைவி மக்களைத் திருத்த முடியவில்லை. அது ஒரு குறையல்ல. அவர்கள் உள்ளத்தால் உறவான எத்தனையோ பேரைத் திருத்தியிருக் கிறார்கள்.

‘மனத்தையும் நல்ல வழியில் காப்பாற்றி உடம்பையும் நோய் இல்லாமல் காப்பாற்றில்ை அந்த வாழ்க்கைதான் வெற்றி மிகுந்த வாழ்க்கை. உடம்பு நோய்வயப்பட்டால் அதற்குப் பிறகு வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லை.”

இத்தகைய மணிமொழிகள் பொதிந்த பேழையாக மண் குடிசை விளங்குகின்றது.

வாடிாமலர் :

மு. வ. எழுதிய இறுதி நாவல் வாடாமலர்’ ஆகும். ‘அந்த

மலர்கள் என்ளுேடு பேசுவனபோல் இருக்கின்றன. அவை அப்படியே இரு க் கட்டும். வாழ்க்கையைப் பற்றி அவை என்னவோ சொல்கின்றன; உணர்த்துகின்றன”-முருகய்யா என்னும் குறிப்புடன் வாடாமலர் மலர்கின்றது.

குழந்தைவேல் என்னும் கதை மாந்தர் தம் இளமைப் பருவத்தை நினைந்து பார்த்த போக்கில் அமைந்துள்ளது. மு. வ. அவர்களின் அறிவு முதிர்ச்சியையும் பட்டறிவுப் பரப்பை யும் இந்நூலிற் காணலாம். o

இப்போதெல்லாம் நேரம் கிடைத்தாலும் அந்த நேரத் தில் ஒரு பங்கு இந்தப் புத்தகங்கள் படிக்கச் செலவிடுகிறேன். நீயும் நல்ல புத்தகங்கள் இரண்டு மூன்றாவது வைத்துக்கொண்டு திரும்பத் திரும்பப் படிப்பது நல்லது. வாழ்க்கையில் மனிதர் களின் தொடர்பு கசக்கும் நாள்வரும். ஆனல், உயர்ந்த புத்த கங்களின் கருத்துக்கள் என்றும் கசப்பதில்லை’ என்று தானப் பன் கூறும் மொழி வளரும் உலகுக்குக் கூறும் வளமான மொழி யாகும.

8---. له .مQL . d

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/125&oldid=586195" இலிருந்து மீள்விக்கப்பட்டது