பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 பெருந்தகை மு. வ.

தொடர்கதைப் புதுமை :

‘பாவை’ ‘அந்த நாள்’ என்னும் இரண்டு நாவல்கள் மட்டுமே இதழ்களில் தொடர்கதையாக வெளிவந்தவை. அவற் றையும் மு.வ. முழுமையாகவே எழுதித் தந்துவிட்டார். இதழ் ஆசிரியர்களே தம் வாய்ப்புக்கு ஏற்பத் தொடர்கதையாக வெளிக் கொணர்ந்தனர். தொடர்கதை வரலாற்றில் மு. வ. வின் செயல் புதுமையானதாகும்.

‘பரிசுக்காகவும் பத்திரிகையில் தொடர்கதை வெளியிட வேண்டிய நிர்ப்பந்தத்திற்காகவும் நாவல்களைப் படைக்கிறவர் களையே என்றும் எங்கும் காண்கிருேம். வேறு எந்தவிதமான தூண்டுதலும் இல்லாமல் படைப்புத் திறனைக் காட்டி நாவல் எழுதுகிறவர்கள் மிக மிகக் குறைவாகப் போய்விட்டார்கள். இந்தப் பதி ைந்து ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் வெளிவந்த நாவல்களில் நூற்றுக்குத் தொண்ணுாறு விழுக்காடு தொடர் கதைகளாகவே வெளிவந்தவை. டாக்டர் மு. வ. போன்றவர்கள் இதற்கு விதிவிலக்கு அவரைப்போன்ற மிகச் சிலரே நாவலைத் தனியே எழுதி முடிக்கிறார்கள்’ என்கிறார் திரு. கி. வா. ஜகந் நாதன்.

முன்னுரை :

மு. வ. தம் நூலுக்கு எவரிடமேனும் முன்னுரை வாங்கு வதையோ இதழ்களில் மதிப்புரை பெறுவதையோ விரும்பினர் அல்லர். ஆனல், இதற்கு விதிவிலக்காக, திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் என்னும் நூலுக்குத் தமிழ்த் தென்றல் திரு. வி. க. வினிடம் அணிந்துரைபெற்றார். நூலுக்குத் தனிப்பெருமை தரும் நுணுக்கமான முன்னுரை. இன்னும் தம்பால் தமிழ் பயின்ற முதன்மை மாணவர் நால்வரிடம் தம் நாவல்கள் நான் கிற்கு அறிமுகவுரை பெற்றார். அல்லி, கரித் துண்டு, நெஞ்சில் ஒரு முள், அகல் விளக்கு என்பவற்றுக்கு முறையே திரு வாளர்கள் ம. ரா. போ. குருசாமி, சி. வேங்கடசாமி, ரா. சீனி வாசன், ச. ரகுநாயகன் ஆகியோர் அறிமுக உரை எழுதியுள்

1. தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும், பக். 150.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/126&oldid=586196" இலிருந்து மீள்விக்கப்பட்டது