பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னை வாழ்க்கை 115

ளனர். தம் ஆசிரியரும், தம் மாணவரும் முன்னுரை வழங்கத் தக்கார் என்னும் முன்னையோர் முறைவழியை மு. வ. போற்றி ர்ை என்பது புலளும்.

முகப்புப்படம் :

தம் நூல்களுக்கு முகப்புப் படங்கள் வரைந்து அழகுபடுத்த மு. வ. விரும்புவதில்லை. நூலின் எளிமையை முகப்புப் படம் கெடுக்கக் கூடாது என்பதும் கருத்துக்கு முரண்பட்ட ஒவியம் இடம் பெற்றுவிடக்கூடாது என்பதும் அவர்தம் உள்ளக் கிடை. ஆதலால் படம் போட்டுக் கவர்ச்சி செய்ய அவர் விரும்பியது இல்லை.

‘ஏன் அழகழகான பல வண்ண முகப்பு ஓவியங்களை நூலின் அட்டைக்கு நீங்கள் பயன்படுத்தக் கூடாது என்று ஒரு சமயம் அவரைக் கேட்டேன். அதற்கு அவர், ஓவியர்கள் பலரை அறிவேன். அதில் ஒவியர்கள் கவர்ச்சி என்ற பெயரால் பல வண்ணங்களில் பெண்மையை மதியாது வரைந்து கெடுத்து விடவும் செய்வார்கள். பிறகு நாம் மறுத்து, படம் வேண்டாம்’ என்பதும் இயலாது. நூலில் இடம் பெறும் எளிமையை இலக் காகக் கொண்ட இலட்சியங்களுக்கு முரணுக - அட்டைகளே . முகப்புச் சித்திரங்களே - இருந்துவிடக் கூடாதல்லவா? என்றார். .

பட்ையல் :

ஒரு நூலைப் பிறருக்குக் காணிக்கையாக்குவதை மு. வ. விரும்புவதில்லை. ‘எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கையில்லை. பெர்னர்ட்ஷாகூட விரும்பியதில்லை. நாம் யாருக்குக் காணிக்கை ஆக்குகிருேமோ அவருக்கு நாம் இயற்றிய கவிதைகளில் - தரம் என்னவாக இருந்தாலும் அவற்றில் - சொல்லப்பட்ட அனு பவங்கள் விருப்பமானவையா என்று கருதாமல் காணிக்கை

பாக்குவது பொருந்தாது. அதுமட்டுமில்லை. ரோஜாவைப்

1. என் ஆசான், திரு. மின்னூர் சீனிவாசன், மஞ்சரி 1974 டிசம்பர் பக். 58 _

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/127&oldid=586197" இலிருந்து மீள்விக்கப்பட்டது