பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருந்தகை மு. வ.

1. தோற்றுவாய்

‘உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே’ என்பது பொருள் பொதிந்த பொன்மொழி; செந்தமிழ்ச் சான்றாேர் சீருற ஆய்ந்து கண்ட செம்மொழி.

உலகம் இடையறவுபடாது இயங்குவதற்குரிய அடிப் படையை, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னே வாழ்ந்த, கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி என்னும் பாண்டிய மன்னன் எண்ணிப் பார்த்தான்.

‘உயிர் வளர்க்கும் அமுதமே கிடைப்பது எனினும் இனிமையானது என்று தாமே உண்ணுதவராகவும், எவரையும் வெறுக்காதவராகவும், சோர்வு இல்லாதவராகவும், சான்றாேர் அஞ்சத் தக்கனவற்றுக்கு அஞ்சுபவராகவும், புகழ் வருமாயின் தம் உயிரையும் கொடுப்பவராகவும், பழி வருமாயின் இவ்வுலகம் முழுமையுமே பெறுவதாயினும் கொள்ளாதவராகவும், செய்த செயலைப் பின்னே எண்ணி வருந்தாத செயல்மாண்பினராகவும், தமக்கென வாழாத் தகைமையராகவும், பிறர் க்கென வாழும் பெற்றியராகவும், சிலர் வாழ்வதால்தான் இவ்வுலகம் இடையறவு படாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது’ என்று துணிந்தான். அத் துணிவு ஒரு பாட்டாக வெளிப்பட்டது.

‘உண்டால் அம்ம இவ் வுலகம்; இந்திரர்

அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத் தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்; துஞ்சலும் இலர்பிறர் அஞ்சுவ தஞ்சிப் புகழெனின் உயிரும் கொடுக்குவர் பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்விலர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/13&oldid=586200" இலிருந்து மீள்விக்கப்பட்டது