பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 பெருந்தகை மு. வ.

அவர்தம் மற்றை நூல்களையும் ஆய்ந்தோரும் உளர். அவற்றை யெல்லாம் நோக்குதல் மு. வ. வைப் புரிந்து கொள்வதற்கு உதவியாம்.

பரிசு :

மு. வ. வின் நூல்களில் திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம், விடுதலையா, மொழிநூல் ஆகிய மூன்றும் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பரிசையும், கள்ளோ ? காவியமோ ?, அரசியல் அலைகள், ஒவச்செய்தி, மொழியியற் கட்டுரைகள் ஆகிய நான்கும் சென்னை அரசாங்கப் பரிசையும் பெற்றன. அகல் விளக்கு சாகித்திய அகாதெமியின் பரிசைப் பெற்றது.

1939 ஆம் ஆண்டில் பச்சையப்பர் கல்லூரிப் பணியேற்றுக் கொண்ட மு. வ. 1961 வரை அங்கே பணி செய்தார். அவர்தம் நாவல்களும் சரி, மற்றை நூல்களும் சரி; பெரும்பாலனவும் பச்சையப்பர் கல்லூரியில் பணி செய்த காலத்தில் வெளிப் பட்டனவே ஆகும். அப் பணியை விடுத்த பின்னே நாவல் எதுவும் வெளிவந்திலது. கடமையால் ஏற்றுக்கொண்ட சில நூல்களே வெளிப்பட்டன எனலாம். ஓய்வு ஒழிவு இல்லாமல் மற்றைப் பணிகள் அவரைச் சூழ்ந்து கொண்டமையே இதற்குக் காரண

LD ITLD -

இனி இக் குறிப்பிட்ட காலத்தில் மு. வ. வின் தனி வாழ் விலும், குடும்ப வாழ்விலும் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் பல. அவற்றை அறிதலும் இன்றியமையாததாம்.

இயற்றமிழ்ச் செல்வர் :

1957 ஆம் ஆண்டில் இந்திய விடுதலைப் போரின் நூற்றாண்டு விழா நாடெங்கும் நடைபெற்றது. அப்போதைய சென்னை அரசு இயல், இசை, நாடகம் என்னும் முத்துறைகளில் சிரிய பணி செய்தாரைத் தேர்ந்து பாராட்ட விரும்பியது. சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் ஏ. எல். முதலியார், உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி பி. வி. இராசமன்னர் முதலிய பெரு மக்களைக் கொண்ட ஒரு தேர்வுக் குழுவினை அமைத்தது. அக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/130&oldid=586201" இலிருந்து மீள்விக்கப்பட்டது