பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னை வாழ்க்கை 119

குழு இயற்றமிழுக்கு மு. வ. வையும், இசைத் தமிழுக்குக் கொடு முடிக் கோகிலம் திருவாட்டி கே. பி. சுந்தராம்பாள் அவர்களை யும், நாடகத் தமிழுக்குத் தமிழ் நாடகத் தந்தை பம்மல் சம்பந்த முதலியார் அவர்களையும் தேர்ந்தெடுத்தது. பரிசு வழங்கியும் பட்டயம் தீட்டித் தந்தும் அரசு பாராட்டியது.

பாட்டியார் மறைவு :

தாயினும் சாலப் பரிந்து வளர்த்த பாட்டியார் நரசம்மாள் 1944 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினர். மு. வ. வுக்கு அவர் மறைவு ஆருத்துயராக இருந்தது. அவர்க்குச் செய்யும் நீத்தார் வழிபாட்டினைத் தம்மோடு பணி செய்யும் பேராசிரியர் அ. மு. பரமசிவானந்தம் அவர்களைக் கொண்டு செய்தார். நீர்த் துறைக்கு ஒரு மூடை அரிசியும் சில்லறைக் காசும் கொண்டு சென்று ஆங்கு வந்த ஏழைகளுக்கு வழங்கினர்.

புதுமனை :

செஞய் நகர் செல்லம்மாள் தெருவில் மனையொன்று வாங் கிளுர். கூட்டுறவுச் சங்கத்தில் இருந்து கடன்பெற்றுத் தம் நேரடிப் பார்வையிலே வீட்டைக் கட்டினர். அவர் அப்பொழுது பெற்ற பயிற்சி பின்னுளில் அவர்தம் நண்பர்கள் வீடு கட்டு தற்கும், மதுரைப் பல்கலைக் கழகக் கட்டடம் கட்டுதற்கும் பேருதவியாக அமைந்தது.

புதுமனை புகுவிழாவிற்குக் குறிப்பிட்ட சில உறவினர்களையும் நண்பர்களையும் அழைத்தார். ஆயினும் கட்டடம் கட்டிய தொழி லாளர்களுக்கு இரண்டு வார ஊதியத்தை அன்பளிப்பாக வழங் கினர். வேட்டி, துண்டு முதலியன எடுத்துத் தந்து விருந்து படைத்து மகிழ்வித்தார். ‘வினையாளை வேலை முடிவில்’ என்னும் நன் மொழியைப் பொன்மொழியெனப் போற்றி நடை முறையில் காட்டினர் மு.வ.

அன்னையார் மறைவு:

மு. வ. வின் அருமை அன்னையார் 45-10-65 இல் வேலத்தில் இயற்கை எய்தினர். 6-11-65 ஆம் நாள் மாலையில் நடப்பும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/131&oldid=586202" இலிருந்து மீள்விக்கப்பட்டது