பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 பெருந்தகை மு. வ.

சொற்பொழிவுகளை நூலுருவாக்கி வெளியிடத் துணிந்தார். அத் துணிவால் 1-3-1940இல் சென்னை, கோவிந்தப்ப நாயக்கர் பள்ளியில் கலித்கொகை மாநாட்டை'க் கழகம் நடத் தியது. விழாத்தலைமை நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் ஏற்றிருந்தனர். மு.வ. மருதக் கலி’ குறித்து ஆய் வுரை நிகழ்த்தினர். அப் பொழிவு, கலித்தொகைச் சொற். பொழிவுகள்’ என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

கழகச்சார்பில் 9-2-1952, 10-2-1952 ஆகிய இரு நாள்களிலும் பத்துப் பாட்டு மாநாடு நெல்லையில் நடை பெற்றது. மு. வ. அவ் விழாத் தலைமை ஏற்றுச் சிறப்புச் செய் தனர். அவர் ஆற்றிய உரை, பத்துப் பாட்டுச் சொற் பொழிவுகள்’ என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

தமிழிசைத் தொண்டு :

தமிழிசை வளர்ச்சிக்காகத் தனியொரு மன்றம் அமைத்துப் பெரும் பொருள் செலவிட்டுப் பண்ணுராய்ச்சி நடத்தவும், இசைத் தமிழ் நூல்கள் வெளியிடவும் செட்டி நாட்டரசர் பெரு முயற்சி செய்தார். அவர்தம் முயற்சியால் சென்னையில் தமி ழிசைச் சங்கம் தோன்றியது. இராசா சர் அண்ணுமலை மன்ற மும் எழுந்தது. 1943ஆம் ஆண்டு மேத் திங்களில் தொடங்கிய அதன் தொடக்கநாள் முதலே, மு. வ. அதன் வளர்ச்சியிலும், ஆய்விலும் மிகுந்த ஈடுபாடுகொண்டார். பண்ணுராய்ச்சி நிகழ்ச்சி ல்ெ தவருது கலந்துகொள்வதை முதன்மையான கடமையாகக் கொண்டிருந்தார். 28-12-1955இல் நிகழ்ந்த பண் ஆராய்ச் யின் ஆருவது ஆண்டுக் கூட்டத்தை மு. வ. தொடங்கி வைத்து உரையாற்றினர். தமிழ்ப் பண்ணின் பழைமை இனிமை, கருநாடக இசை தமிழிசையில் இருந்து பிறந்த வகை ஆகியவற்றை விரித்துரைத்தார்.

பண்ணுராய்ச்சி :

ஒருமுறை காந்தாரம், பியந்தைக் காந்தாரம், கொல்லி, கொல்லிக் கெளவாணம் ஆகிய நான்கு பண்களைப் பற்றிய தருக்கம் எழுந்தது. ஓதுவார் சிலர் நான்கு பண்களையும் ஒரே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/134&oldid=586205" இலிருந்து மீள்விக்கப்பட்டது