பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னை வாழ்க்கை 123;

மாதிரியாகவே பாடிவருகின்றாேம் என்றனர். மு.வ. அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. ‘நான்கு பண்களையும் ஒன்றாகவே. பாடுகிருேம் என்று பதிவு செய்து கொள்வதில் எனக்குத் தடை யில்லை. ஆனால், தேவார ஆசிரியர்கள் காலத்திலும் இவ்வாறு, தான் பாடினர்கள் என்று கூறமட்டும் நான் ஒப்பமாட்டேன். அது ஆராய்ச்சிமுறைக்குப் பொருத்தமானதும் அன்று’ என்று தம் கருத்தினை எடுத்துரைத்தார்.

உலகத் தமிழ் மாநாடு :

1968ஆம் ஆண்டு சனவரித் திங்களில் பேரறிஞர் அண்ணு அவர்கள் பெருமுயற்சியால் இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு சென்னையில் நடைபெற்றது. அம் மாநாட்டை ஒட்டித் தமிழ்ப் பேரறிஞர்களின் கருத்தரங்கு பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நிகழ்ந்தது. கருத்தரங்கின் வெற்றிக்கு மு.வ. முழு முயற்சியாகப் பாடுபட்டார். பன்னுட்டுப் பேரறிஞர்களும் கூடிய அக் கருத்தரங்கில், ‘திருப்பள்ளி எழுச்சி’ என்னும் தலைப்பில் மு. வ. ஆராய்ச்சிக் கட்டுரை படித்தார்.

விழாவை ஒட்டி, தமிழ் வளர்த்த சான்றாேர் பலர்க்குச் சிலை யெடுத்துச் சிறப்பிக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. அதன்படி புரட்சிக் கவிஞர் பாரதிதாசனர் அவர்கள் சிலைத் திறப்புவிழா உள்ளூராட்சித் துறை அமைச்சர் மாண்புமிகு மா. முத்துசாமி அவர்கள் தலைமையில் நிகழ்ந்தது. மு.வ. புரட்சிக் கவிஞர் சிலையைத் திறந்து வைத்துச் சிறப்புரையாற்றினர்.

‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு’ என முழங்கிய புரட்சிக் கவிஞர் சிலையை, வெலிங்டன் மகளிர் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரிக்கு எதிரே ஆசிரியர்க்கு ஆசிரியராம் மு. வ. திறந்துவைக்க ஏற்பாடு செய்த தமிழக அரசின் தகுதி போற்றும் திறம் பெரிதாம். மு.வ. வின் தமிழ்வாழ்வின் தனிப்பரிசு இஃதெனல் சாலும் ! இனி மு.வ. வின் பல்கலைக் கழகப் பேராசிரியப் பணி குறித்துக்

காண்பாம்.

1. பண் ஆராய்ச்சியும் அதன் முடிவுகளின் தொகுப்பும், பக். 88.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/135&oldid=586206" இலிருந்து மீள்விக்கப்பட்டது