பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Il24 பெருந்தகை மு. வ.

ஆ. பல்கலைக் கழகப் பேராசிரியர்

சென்னைப் பல்கலைக் கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரிய சாக விளங்கியவர் சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை அவர்கள் ஆவர். நெல்லைச் சீமையில் பிறந்த சேதுப்பிள்ளை அவர்கள் முதற்கண் வழக்கறிஞராகத் தம் தொழிலைத் தொடங்கினர். அவர்தம் தமிழ்ப் புலமையும் நாநலமும் அவரைத் தமிழ்த் துறைக்குத் தள்ளின. 1936 ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளர் ஆளுர். ஆராய்ச்சித் துறைத் தலைவராகத் திகழ்ந்தார். 25 ஆண்டுகள் அன்னைத் தமிழுக்கு அரும்பணியாற்றி 1961ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் ஓய்வு பெற்றார்.

இருபத்தைந்தாண்டுகள் தொடர்ந்து தமிழ்ப்பணியாற்றிய சேதுப்பிள்ளை அவர்களுக்குச் சென்னைப் பல்கலைக் கழகம் வெள்ளிவிழாக் கொண்டாடியது. தென்றல் தவழும் தீந்தமிழ் நடையைத் திக்கெல்லாம் பரப்பிய பெருமகளுரின் சீர்த்தியெல் லாம் விளங்க வெள்ளிவிழா அமைந்தது.

டாக்டர் ஏ. எல். முதலியார் தலைமை தாங்கினர். அண்ணு மலைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் திவான் பகதூர் தி. மு. நாராயணசாமிப்பிள்ளை அவர்களும், செட்டி நாட்டரசர் டாக்டர் இராசா சர். முத்தையா செட்டியார் அவர்களும் கலந்துகொண்டு உரையாற்றினர். பேராசிரியர் சேதுப்பிள்ளை அவர்கள் ஆற் றங்கரையினிலே’ என்னும் தலைப்பில் தொடர்ந்து கல்கி இதழில் எழுதி வந்த கட்டுரைகள் நூலாக்கப் பெற்று, துரத்துக்குடி வ. உ. சி. கல்லூரி முதல்வர் பேராசிரியர் அ. சீனிவாசராகவன் அவர்களால் வெளியிடப் பெற்றது. அரிய கட்டுரைகள் அடங் கிய வெள்ளி விழா மலர்’ ஒன்று டாக்டர் மா. இராசமாணிக்க ஞர் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிப்பட்டது. விழாச் செல்வரின் விழுமிய வரலாறு டாக்டர் ந. சஞ்சீவி அவர்களால் எழுதப்பெற்று விழாமலரில் இடம் பெற்றது. ஆனல், விழாவுக் குரிய பெருமகளுர் விழா மேடையில் கலந்துகொண்டு இருந் தார் அல்லர். உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இரு ந் தாா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/136&oldid=586207" இலிருந்து மீள்விக்கப்பட்டது