பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னை வாழ்க்கை 125,

அன்பர்கள் ஆர்வத்தால் எடுக்கப்பெற்ற அணிவிழாவின் இடையே சொல்லின் செல்வருக்குச் சொல்லொளு அல்லல் ஒன்று உள்ளுக்குள் இருந்தது. அது தம் உடல்நிலை பற்றிய தன்று; வேறெதுவும் பற்றியதும் அன்று; தம் உயிர்த் தமிழ்த், துறைக்கு உரியார் ஒருவரை அமர்த்தம் செய்தல் வேண்டும். என்பதேயாம். பல்கலைக்கழகப் பேராசிரியர் மு. வ. :

சொல்லின் செலவர் உள்ளம் மு.வ. வை எண்ணியது.

முதலும், முடிவும் ஆகிய முழு நினைவும் மு.வ. வின் மேலேயே, பதிந்து நின்றது. தம் இடத்திற்கு மு. வ. வே வரவேண்டும். எனத் தாம் ஆரா_விருப்புக் கொண்டிருப்பதனைத் தக்கார் வழியே மு. வ. வுக்கு அறிவித்தார். ஆல்ை, மு. வ. பல்கலைக் கழகப் பணியை விரும்பினர் அல்லர். ஆயினும் சேதுப்பிள்ளை அவர்கள் மு.வ. வை வலியுறுத்தினர். தம்மை மருத்துவமனையில் பார்க்க வந்த மு. வ. வின் இருகைகளையும் பற்றிக்கொண்டு தமக்குப். பின்னர்த் தாம் இருந்த இடத்தை அவரே அணிசெய்ய வேன் டும் என்று வலியுறுத்தினர். தமிழின் நலங்காப்பதோடு, தாம். ஏற்படுத்தியுள்ள அறக் கட்டளைகள் செவ்வையாக நடைபெறு, வதற்கும் நற்றுணையாக அமையும் என்பதையும் வற்புறுத்தினர். சேதுப்பிள்ளை அவர்களின் செந்தமிழ்ப் பற்றும் அவர்தம் கலக்க மும் கண்ணிரும் மு. வ. வை உருக்கின. தாம் அப் பொறுப்பை ஏற்பதாக மு. வ. உறுதி கூறினர். விண்ணப்பம் அனுப்ப இசைந்தார்; தேர்ந்தெடுக்கவும் பெற்றுப் பணியமர்த்தமும் பெற். ருர். மருத்துவமனையில் இருந்த சொல்லின் செல்வர் (மு.வ. பணியமர்த்தம் பெற்றதைக் கேள்விப்பட்டு மட்டற்ற மகிழ் வுற்றார்.

1961ஆம் ஆண்டு சூலைத் திங்கள் முதல் நாள் டாக்டர் மு.வ. சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவராளுர். அப்பொழுது அவருக்கு 800 உருபா சம்பளம் வழங்கப்பெற்றது. ஆராய்ச்சித் துணை :

மு.வ. பச்சையப்பர் கல்லூரியில் பணிசெய்யும் போதே மேல்நிலைப் பட்டம் பெறுவார்க்குச் சிரிய வழிகாட்டியாகத்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/137&oldid=586208" இலிருந்து மீள்விக்கப்பட்டது