பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னை வாழ்க்கை 127

ஆண்டு பயின் ருேர் பட்டம் 1963-64 திரு. இரா. தண்டாயுதம் பி. எச். டி. 1964-65 செல்வி. வி. பி. தேவதத்தா

திரு. டி. முத்துக்கண்ணப்பர் 1965-66 திருமதி இந்திரா சோமசுந்தரம் எம். லிட். 1966-67 திரு. எஸ். தில்லைநாதன் * * 1967-68 , எஸ். மைக்கேல் இருதயம் பி. எச். டி 1969-70 , டி. ஆர். ஜனுர்த்தனம் 7. , வி. ஆர். ஞான சிகாமணி 77 1970–71 , மா. செல்வராசன் 77

, அ. நாகலிங்கம் 77

அறக்கட்டளைப் பணி :

பல்கலைக் கழகப் பேராசிரியப் பெரும்பணியைச் சீருற ஆற்றிய மு. வ. சில அறக் கட்டளைப் பணிகளையும் ஏற்று நடாத்தும் கடப்பாடு உடையவராக இருந்தார். சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை தம் அன்னையார் சொர்ணும்பாள் பெய ரால் நிறுவிய அறக்கட்டளை ஒன்று; சொல்லின் செல்வர் பெய ரால் வெள்ளிவிழாக் குழுவினர் நிறுவிய அறக்கட்டளை மற் ருென்று; கல்கி திரு. இரா. கிருட்டிண மூர்த்தி அவர்கள் பெய ரால் கல்கி நிறுவனத்தார் நிறுவிய அறக்கட்டளை இன்னென்று; ஆக மூன்று அறக்கட்டளைகளுக்கும் தக்காரை அழைத்துத் தகுதி வாய்ந்த தலைப்பில் ஆராய்ச்சியுரை நிகழ்த்துவித்தல் மு. வ. வின் கடமையாயிற்று. அதனைச் சீருறச் செய்தார். அவ் வகை யால் அரிய தலைப்புகளில் அறிஞர்களின் ஆய்வுக் கோவைகள் வெளிப்பட்டுத் தமிழ் வளம் கொழிப்பதாயின. புலமிக் கவரைப் புலமை தெரிதல் புலமிக் கவர்க்கே புலனும்’ என்பது மெய்ப்பட்டு விளங்கப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறை தனிப்பெரும் பொலி வுடைய தாயிற்று. துணைவேந்தர்களின் தனிப்பெரு மதிப் பிற்கு உரியவராக மு. வ. வை அவர்தம் செயல் திறமும், பண்பு நலமும் உயர்த்தின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/139&oldid=586210" இலிருந்து மீள்விக்கப்பட்டது