பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னை வாழ்க்கை 129

இலக்கியக் காட்சிகள், பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை, Ingo adigal, குறள் காட்டும் காதலர் என்னும் நூல்களேயாம்

பின்னல் :

இவற்றுள் மண்ணின் மதிப்பு'ப் பற்றி முன்னரே கண்டுள் ளோம். இலக்கியக் காட்சிகள் 1951 முதல் 60 வரை அவ்வப் போது எழுதப்பெற்ற கட்டுரைத் தொகுப்பு நூல் ஆகும். அதன் முதற்பதிப்பு 1962 ஆம் ஆண்டு வெளிவந்தது. இலக்கியக் காட்சி விளக்கம் மிக அரியது; கற்பார் உள் ளத்தைக் கவ்வும் வனப்பினது. அதிலே ஒரு மின் னல்!

அடடா! என்ன மின்னல் கண்ணே போய்விடும்போல் o ருக்கிறதே’ என்றார் (எதிர்வீட்டு நண்பர்).

கண் பூத்துப் போகும் என்பார்களே, அப்படிப்பட்ட மின்னல்!’ என்றேன்.

அதுவேறு அய்யா. எந்த மின்னலைப் பார்த்தாலும் அப்படித்தான் இருக்கும். ஆல்ை இது அப்படி இல்லையே. பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டு மூலையில் உட்கார்ந்திருந் தாலும் முடியவில்லையே. நானும் பார்க்கிறேன். ஒருமணி நேர ாகக் கொஞ்ச நேரமும் விடாமல் இப்படி மின்னுகிறதே! ஒரே இருளாகக் கவிந்து கொண்டது. மணி எட்டு ஒன்பது இருந் 1.1 ബ இருக்கலாம். என்ன இருட்டு! ஆல்ை, இருட்டை வெட்டி வெட்டிப் பிளப்பதுபோல இப்படி விடாமல் மின்னுகின்றதே! இடி வேறே ஓயவே இல்லை. குல எல்லாம் நடுங்குகின்றது. திண்ணையில் உட்காரவும் முடியவில்லை. வீட்டுக்குள் இருந்தா லும் முடியவில்லை. சில வேளைகளில் பயமாகக்கூட இருக்கிறது. அப்படி இருக்கிறது, இந்த இடியும் மின்னலும் கலந்த கோடை மழை உன்ளுேடாவது சொல்லலாம் என்றுதான் வந்தேன்’

என்றார்,

‘மலைப் பக்கம், அதல்ை இடி இப்படி முழங்குவது வழக் _ம் தானே’ என்றேன். சொல்லிக் கொண்டே இருக்கும்போது

பெ. மு. வ.-9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/141&oldid=586213" இலிருந்து மீள்விக்கப்பட்டது