பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 பெருந்தகை மு. வ.

வானம் அதிர்ந்து விழுவதுபோலக் கிடு கிடு கிடு’ என இடி முழக்கம் மிகுந்தது.

அட அட அட! என்ன இடி இப்படிப் பட்டனத்தில் உண்டா?’ என் ருர்.

எப்போதோ சில நாட்களில் மட்டும்’ என்றேன்.

இந்த இடி இருந்தாலும் இருக்கும்; இப்படி மின்னல் இருக்காதய்யா. நானும் இந்த மா திரி மின்னலைப் பார்த்து நெடுங்காலம் ஆச்சு! இதோ பாரேன் வேண்டு மென்றே ஒயா மல் கண்ணை மூடி மூடித் திறப்பதுபோல் விட்டு விட்டு விநாடிக்கு ஒருமுறை மின்னுகிறதே’ என்றார்.

கண்ணை மூடித் திறப்பது போல’ என்று சொன்ன வுடனே இமைப்பது போல மின்னி’ என்ற தொடர் என்னை அறியாமல் என் வாய்க்கு வந்தது. உடனே நண்பர் என்ன என்ன ? என்று அதை விளக்கும்படி கேட்டார். அதற்குப் பொருள் சொல்லாமலே இரண்டு மூன்றுமுறை திரும்பத் திரும்பச் சொன்னேன். பொருத்தம் பொருத்தம் என்று தலை யசைத் தார் நண்பர். பத்தொன்பது காட்சிகளைக் கொண்ட படைப்பு இலக்கியக் காட்சி ஆகும்.

குறள் காட்டும் காதலர்’ 1935, 56ஆம் ஆண்டு களில், எழுதப்பெற்று இதழில் உலாக் கொண்டவர் எனினும் நூலுரு வில் அவர் வெளிப்பட்டது 1968 ஆம் ஆண்டிலேயே ஆகும். நோயும் மருந்தும் என்பது தொடங்கி, ஊடல் உரிமை ஈருகப் பதினெட்டுக் கட்டுரைகளைக் கொண்ட நூல் குறள் காட்டும் காதலர் ஆகும்.

பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை’ என்பது பிஎச்.டி. பட்டத்திற்கு மு. வ. எழுதித் தந்த ஆங்கில நூலின் மொழி பெயர்ப்பு ஆகும். திரு. ம. ரா. போ. குருசாமி, திரு. பீர் -1. அண்ணு) மaல, திரு கதிர் மகாதேவன் ஆகியோரால் மொழி பெயர்க்கப் பெற்ற இந் நூல் 1964 இல் வெளிவந்தது. இதன் முற்பாதி கஜலக்கதிர் இதழில் தொடர்ந்து வெளிவந்ததாகும். இயற்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/142&oldid=586214" இலிருந்து மீள்விக்கப்பட்டது