பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னை வாழ்க்கை 131

பெறும் இடம், பாடிய புலவர்கள், நிலம், வானம், பயிரினமும் உயிரினமும், உவமையில் இயற்கை, இயற்கையோடு இயைந்த வாழ்வு, முடிவுரை என்னும் எட்டுப் பகுதிகளில் 621 பக்கமாக வெளிவந்தது இந் நூல். ... : : - * - I

பழந்தமிழ்ச் சான்றேர்கள் நமக்கு அளித்த இலக்கியச் செல்வம் ஓர் அழகிய பூந்துணர் ஆகும். அவ் வினிய பூந்துணரில் தொடுக்கப்பட்ட மலர்கள் உருவத்தால் பல திறத்தன; நிறத் தால் பல வகையின; மணத்தால் பல நிலையின; சுவையால் பல அமைப்பின; மூன்றே வரிகளில் அமைந்து உள்ளத்தைக் கொள்ளே கொள்ளும் ஐங்குறுநூற்றுப் பாட்டும் அங்கு உண்டு. எழுநூற்று எண்பத்து இரண்டு வரிகளைக் கொண்ட மதுரைக் காஞ்சியும் அங்கு உண்டு’ எனத் தொடங்கும் பழந்தமிழ் இலக கியத்தில் இயற்கை, சங்கப் பாடல்களின் இயற்கைக் கருவூலக் காட்சி யகமேயாம். இந் நூலிலுள்ள, பயிரினமும் உயிரின

மும்’ என்னும் பகுதி தனி நூலாக வந்ததும் இவண் குறிப்பிடத் o க் கத T ம் h

இளங்கோவடிகள் குறித்து அண்ணுமலைப் பல்கலைக் கழ கத் தில் ஆங் கிலத்தில் ஆற்றிய அறக்கட்டாேச் சொற்பொழிவே nேg adigal என்னும் நூலாகும். இஃது 1967ஆம் ஆண்டில் வெளிவந்தது. இளங்கோ அடிகள்’ என்னும் தமிழ்நூல் 1959ஆம் ஆண்டிலே வெளிவந்ததையும், இளங்கோ நாட்கம் 1952ஆம் ஆண்டிலே வெளிவந்ததையும் முன்னரே அறிவோம்.

மு.வ. சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியப் பணிபுரிந்த கால எல்லேயுள் நிகழ்ந்த சில சிறப்பான நிகழ்ச்சிகள் உண்டு. அவற்றுள் விரிவஞ்சி மூன்று நிகழ்ச்சிகளைக் குறிப்பிடலாம். அவற்றுள் ஒன்று அரசு திருமணம்; மற்றாென்று மு.வ. படத் திறப்பு: இன்னென்று மு.வ. மருத்துவமனைத் திறப்பு.

அரசு கிருமணம் :

மு.வ வின் முதன்மைந்தர் டாக்டர் அசசு-திருநாவுக் எம். பி. பி. எஸ். திருமணம் 7-5-62 ஆம் நாள் தியாகராய காமாட்சி திருமண மண்டபத்தில் நிகழ்ந்தது. மன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/143&oldid=586215" இலிருந்து மீள்விக்கப்பட்டது