பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னை வாழ்க்கை 133

களுடைய கருத்துக்களை ஏற்றுக் கொள்கின்றவர்கள் மறுப்ப் வர்கள் என்று பிரித்துப் பார்க்க முடியாத வகையில் தமிழ்க் கருத்துக் கொண்ட அத்தனை பேரும் மிக இனிமையாகவும் எளி தாகவும் ஏற்றுக் கொள்ளத் தக்க முறையில் தம்முடைய கருத் துக்களைப் பக்குவப்படுத்தி, பதப்படுத்தி, பலருக்கும் நல்லவிதத்’ திலே புரியும்படியாகச் செய்து அளித்துக்கொண்டு வருகின்ற ஒரு பெரும் எழுத்தாளர்.

‘சிலர் பேசுகின்ற பெர்ழுதும்-எழுதுகின்ற பொழுதும்சிந்திக்காமலே கூடப் பேசிவிடுவது உண்டு; பேசிவிட்டுப் பிறகு சிந்திப்பவர்களும் உண்டு, ஏன் இதைப் பேசிளுேம் என்று; சிலர் பேசிப் பிறரைச் சிந்திக்கச் செய்வது உண்டு; ஆளுல் டாக்டர் மு.வ. அவர்கள் தம்முடைய எழுத்தின் மூலம்-பேச் சின் மூலம்-தாமும் சிந்திப்பார். அவருடைய பேச்சையும் எழுத்தையும் பெற்றவர்கள் தாமும் சிந்திக்கத் தொடங்குகின்ற வகையில் அந்தப் பேச்சுக்கும் எழுத்துக்கும் தனிச் சிறப்பு இருக் கின்றது. * *

‘மு. வ. வின் எழுத்துக்களைக் கற்பவர்க்கு ஏற்படும் செய லாண்மையைச் சீருற விளக்கிளுர் அறிஞர் அண்ணு! அவ ருடைய எழுத்திலே காணப்படுகின்ற கருத்துக்களைப் படித்துப் பார்க்கின்ற ஒவ்வொருவரும், படித்தவுடனே நியாயந் தானே என்று சொல்வர்; இவ்வளவு நியாயமான இந்தக் கருத்தை ஏன் மற்றவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை என்ற திகைப்பு அவர்க்கு ஒருகணம் வரும். அவ்வொரு கணம் வந்த திகைப்பு மறுகணம் மறைந்து இந்த உண்மையை மற்றவர்க்குச் சொன் ல்ை அல்லவா மற்றவர்கள் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்வார்கள் என்ற ஆர்வத்தைப் பெறுவர்’.

-

மு. வ. செய்திருக்கின்ற பெருந் தொண்டுகளை விரித்துக் கூறிய அறிஞர் அண்ணு, அவர்க்கு நாம் செய்யத் தக்க கடப்பாடு யாது’ என்பதை நன்கு வலியுறுத்தினர்; அவர் செய்திருக் கின்ற பெருந் தொண்டுக்கு நாம் காட்டக் கூடிய கைம்மாறு:அவருக்கு நாம் ஆற்றக்கூடிய நன்றிக்கடன்-திருவுருவப் படங் களைத் திறந்து வைப்பதன்று. அவர் பெயராலே மன்றங்களே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/145&oldid=586217" இலிருந்து மீள்விக்கப்பட்டது