பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படிப்படி வளர்ச்சி:

வேலத்தில் இருந்த மு. வ. வை அவர் கற்ற தமிழ் திருப்பத் துர்க்கு ஈர்த்தது. திருப்பத்துாரில் பெற்ற வளமும் உற்ற பட்டமும் மு. வ. வைச் சென்னைப் பச்சையப்பர்க்கு ஆட்படுத் தியது. ஆங்கு அவர் வழிக் கிளர்ந்த அறிவுநலம் சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியக் கட்டிலை வழங்கியது. அறிஞர்க்கு அறிஞரை ஒரு துறையில் மட்டும் ஆட்சி நடாத்திக் கொண்டு இருக்க வைத்து நாட்டின் நல்வாழ்வைக் குறைத்துக் கொள்ள விரும்பவில்லை. ஆதலால் அவர்கள் ஆர்வமும் முயற்சியும் மு. வ. வை மதுரைப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக உயர்த்தி அவர் தம் உயர் வால் தானும் உயர்ந்தது.

துணைவேந்தர் :

தமிழ்நாடு மேதகு ஆளுநரும், மதுரைப் பல்கலைக் கழக வேந்தருமாகிய சர்தார் உச்சல்சிங் அவர்கள் 11-1-1971ஆம் நாள் மு. வ. அவர்களை மதுரைப் பல்கலைக் கழகத் துணைவேந்த ராக நியமனம் செய்து ஆணை பிறப்பித்தார். தமிழ்நாட்டின் பல்வேறு நிறுவனங்களைச் சார்ந்த பெருமக்களும் மிக விரும்பி வரவேற்றனர். தக்கதொன்றைச் செய்ததாகத் தமிழ் நெஞ் சங்கள் மகிழ்ந்தன. என் கடன் பணிசெய்து கிடப்பதே’ என் பதில் ஊறிய மு. வ. என்றும் போலவே அமைந்த மனத்தராய்ப் பணி மேற்கொண்டார்.


அன்பர்களும் நண்பர்களும் மு. வ. வை நேரில் வந்து பாராட்டித் தம் மகிழ்வைத் தெரிவித்துக் கொண்டனர். மு. வ. வும் குறிப்பிடத்தக்க பெரியவர்களைக் கண்டு வாழ்த்தினைப் பெற்றார். மதுரைக்குப் புறப்படும் நாளையும், வண்டியையும் வெளிப்படுத்தாமலே இருந்தார். அவற்றைப்பற்றி அன்புடன்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/148&oldid=586220" இலிருந்து மீள்விக்கப்பட்டது