பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 பெருந்தகை மு. வ.

பணியுமாம் பெருமை’ என விளங்கினர். அவர் கொண்டிருந்த பண்பு நலங்களையும் பணிச் சிறப்பையும் இவண் சுட்டுதல் பயில் வார்க்குப் பெரும் பயன் நல்குவதாம்.

செயலாண்மை :

மு. வ. எப் பணி ஆயினும் விதிமுறைகளுக்கு இணங்கவே (As per the Rudes and Regulations) fløyn3sj flöfðîøř.. ;35lb பணியுடன் தொடர்புடைய அனைவருக்கும் நெறி முறைகளைத் தம் எடுத்துக்காட்டால் கற்பித்தார். எச் செயலா யினும் சரி, அது முன் கூட்டியே திட்டமிடப் பெற்றுச் செவ்விதின் நிறை வேற்றப் படவேண்டும் என்பது மு. வ. வின் அடிநாள் தொட்டே வளர்ந்த இயல்பாகும். இன்று செய்ய வேண்டிய செயலை நாளைச் செய்யலாம் என்று தள் ளிப் போடுவதை விரும்பார். பிறரையும் அவ்வாறே கடமையில் ஊன்றி நிற்கும் வண்ணம் உறுதியாகப் பார்த்துக் கொண்டார். ஆதலால் பல்கலைக் கழக அமைப்பு முழுமையும் விரைந்து இயங்க வழியாயிற்று.

அமைந்த செயலாண்மை மு. வ. வின் உடைமையாகும். இன்முகத்துடன் எச் செயலிலும் ஈடுபடுவார். ஆயினும் அவர் தம் எண்ணங்களிலும் செயன் முறைகளிலும் ஒரு விறுவிறுப்பு அமைந்திருக்கும்.

மு. வ. வின் எழுத்து முத்துக் கோத்து வைத்தாற் போன்றது. அடித்தல் திருத்தல் அற்றது. இடைச் செருகலும் நீக்கலும் இல்லது. அதனே ப்பற்றி முனனரும கண்டுள்ளோம். கதைகளும் கட்டுரைகளும் எழுதுவதில் கைவந்த அக் கலை அலுவலகக் குறிப்பு வகையிலும் அருமையாக அமைந்து விளங் கியது. கருத்துப் பிழைக்கோ எழுத்துப் பிழைக்கோ இடம் தாராதது அவர் தம் அலுவலகக் குறிப்புக்கள் Official notes).” என்று அவர்தம் செயலாண்மைக்குக் கீழே பணி செய்தவர்கள் கூறுவர்; வியந்து போற்றவர். தம் அமைப்பின் கீழே பணி செய்பவர் அடித்தல் திருத்தல்களுடன் எழுதினுல் அதனைச் செவ்வித க எழுதும் வழி முறையைப் பொறுமையாகக் கூறு

- * கிா க்க - கக்கே o ..

வார். எழுத்துத் திருத்தமாக இருக்கவேண்டிய இன்றியமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/150&oldid=586223" இலிருந்து மீள்விக்கப்பட்டது