பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 பெருந்தகை மு. வ.

என்பதை உணர்ந்து செயல்பட்டார். தம் குடும்ப வாழ்வில் கடைப்பிடித்த இவ்வொழுங்கு முறையே பல்கலைக் கழக வாழி விலும் பரிமளித்தது.

ஒழுங்கும் ஒழுக்கமும் :

ஒழுங்கு இல்லாதவர் எவராயினும் கடமையில் கருத்து இல் லாதவர் எவராயினும் மு. வ. வின் நல்லெண்ணத்தைப் பெற மாட்டார். எவரிடம் மிகந்த அன்பு கொண்டுள்ளாரோ அவரையே குற்றம் காணும்போது மிகுதியாகக் கண்டிப்பார். அக் கண்டிப்பிலேயே கனிவு ஒளிந்துள்ளதை உணருமாறும அமைந் திருக்கும். திருந்தாத உள்ளம் உடையவர்க்குச் சரியான தண்டனை தருவார்; அஃது அவருக்கு எதுவும் சொல்லாது ஒதுங்கி விடுவதே !

அதிகர வரம்பு மீருமை :

துணைவேந்தரை நாடினல் உதவி கிடைக்கும் என்னும் துணிவால் சென்னையில் இருந்தும், அவர் பிறந்து வளர்ந்த பகுதிகளில் இருந்தும் உறவினர்களும் நண்பர்களும் முயன்ற துண்டு. நேரில் வந்தும் அஞ்சல் எழுதியும் வேண்டிக் கொண்டது உண்டு. ஆளுல், அவர்கள் வேண்டுதல் நிறைவேறு தற்காகத் தம் தனிப்பட்ட செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டது இல்லை. முறையான கோரிக்கைகளுக்கு மதுரைப் பல்கலைக கழக நான்கு மாவட்ட எல்லைக்குள் ளேயே வாய்ப்பு இல்லாத போது வெளியே இருந்துவரும் வேண்டுதல்களை நிறைவேற்ற இயலாது என்று தம் வருத்தத்தை எடுத்துரைப்பார். முதுகலைப் பட்டப் படிப்புத் தொடர்பாகத் தாம் பதவிக்கு வரும்வரை நடை முறையில் இல்லாத 25 விழுக்காடு முறையை துணைவேந்தர்க் கென அவர் ஏற்படுத்தியது ஏழை எளியவர்களின் முறையான கோரிக்கைகளுக்கு உதவவேண்டும் என்பதாலேயேயாம்.

விரைந்து செயலாற்று வினை நுட்பம் :

ஒரே நேரத்தில் பல அலுவல்களைச் செம்மையாகவும் திருத்தமாகவும் செய்வதில் தேர்ச்சி மிக்கவர் மு. வ. தம் அறை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/152&oldid=586225" இலிருந்து மீள்விக்கப்பட்டது