பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணைவேந்தர் 141

யில் அலுவலகக் கூட்டம் நடத்திக் கொண்டிருக்கும் பொழுதில் கூட, தொலைபேசி அறைகூவல்களைக் கவனிப்பார்; கடிதங் களைப் பார்ப்பார்; அலுவலகக் கட்டுகளையும், கோப்புகளையும் பார்த்துக் குறிப்பெழுதுவார். குறிப்பிட்ட ஒரு பணிக்காக நாள் வழிமுறைப் பணிகள் தடைப்பட்டு விடக்கூடாது’ என்று விளக்கம் கூறுவார்.

அலுவலரிடையே எழும் போட்டி, பொருமை, பூசல்கள் தம் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டால் செவ்வையாகச் செவி சாய்த்துக் கேட்பார். இரு சார்பிலும் உரிமையாக எடுத் துரைக்கும் வாய்ப்புத் தருவார். நல்ல நடுவராக முறை வழங்கு வார். தவறு செய்தவர்களை உடனே தண்டி க்கவேண்டும்’ என்னும் கருத்தை ஏற்றுக் கொள்ளார். ‘குற்றவா ளியைத் தண்டிப்பதினும் திருந்தி வாழச் செய்வதே வீட்டுக்கும் நாட் டுக்கும் நலம்’ என் பார். திருந்த வாய்ப்புத் தந்தும் திருந்தாத வர்களையே தண்டிக்க முனைவார்.

கடமை உணர்வு :

தம் குடும்பப் பணிக் கெனவோ, தம் பணிக்கெனவே அவர் விடுமுறை எடுத்துக் கொண்டது இல்லை. பட்டமளிப்பு விழா அன்று நெஞ்சு வலிகண்டு அதன் பின்னர் மூன்று நாள்கள் துரையில் இருந்த போதும் ஓய்வு எடுத்துக்கொள்ளாமல்என் சென்னைக்கு வந்த பின்னரும் ஓய்வு எடுத்துக்கொள்ள மல்-படுத்த படுக்கையில் இருந்துகொண்டே பல்கலைக் கழகக் கோப்புகளைப் பார்த்துக் குறிப்பு எழுதினர். தனிப்பட்ட ஒரு வால் பலருக்கு த் தொல்லை நேர்வதைப் பொறுக்கமாட்டார்

அதனுல்தான் பட்ட மளிப்பு விழாத் தொடங்குவதற்கு நான்கு பணி நேரத்திற்கு முன்னே தமக்கு உண்டாகிய நெஞ்சு வலியைப் பிறர் அறியாவண்ணம் மறைத் து நிகழ்ச்சியைச்

சவ்வையாக நிறை வேற்றி ஒர்

மறைத்துப் போற்றியவை

தாம் உற்ற நலிவை மறைத்துப் போற்றுவதை அல்லாமல் தம் பெருமையையும் மறைத்துப் போற்றினுள். அமெரிக்கநாட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/153&oldid=586226" இலிருந்து மீள்விக்கப்பட்டது