பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணை வேந்தர் 145

எளிமை போற்றல் :

எளிமையின் உறைவிடம் மு.வ. எனின் மிகை ஆகாது. இந் நாளில் குளிர்சாதன அறைகள் அமைப்பது எங்கும் எளி மையாகக் காணக் கூடிய ஒன்றேயாம். அலுவலகங்களிலும் அரங்கங்களிலும் அத்தகைய அமைப்புகள் பல்கியுள்ளன. ஆளுல் பல்கலைக் கழகத் துணைவேந்தராகிய மு.வ. அத்தகைய அமைப்பைப் பலப்பலர் வற்புறுத்தியும் ஏற்றுக் கொண்டார் அல்லர். ஆனல், இடைவிடாத வற்புறுத்தலால் துணைவேந்தர் இல்லத்தில் ஒரே ஓர் அறையில் மட்டும் குளிர்சாதன வசதி செய்தற்கு இசைந்தார். அதற்கும் காரணம் உண்டு.

ஆண்டுதோறும் கோடை விடுமுறையில் பெங்களுர்க்குச் செல்வார்; குன்னூர்க்கும் போவார்; அவ்வாறு பழகியவர் கோடை வெயில் கொடுமையைத் தாங்க வேண்டுமே கோடை யிலும் இருந்து பல்கலைக் கழகப் பணியைப் பார்த்து ஆகவேண் டுமே! இந் நிலையால்தான் அன்பர் வலியுறுத்தலுக்கு ஆட் பட்டு ஏற்றுக் கொண்டார் மு.வ.

‘காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல், மீக்கூறும் மன்னன் நிலம்’ என்னும் பொது மறைக் கருத்து ஆட்சியுரிமை யுடைய எவருக்கும் ஏற்கத் தக்கதே அல்லவா? அந்நிலையில் மு.வ. எவரும் தம்மை எளிதில் காணவும், தம் குறைகளைக் கூறவும் வாய்ப்பு அளித்தார். அதற்கென்றே குறித்த நேரமும் ஒதுக்கி வைத்தார். ஒருவர் கூறும் வேண்டுதல் அல்லது கோரிக்கை தக்கதெனத் தமக்குத் தோன்றில்ை மீண்டும் நினை வூட்டல் இல்லாமலே நிறைவேற்றிவைத்தார். அத்தகைய குறிப்புகளை அவ்வப்போது எழுதிக் கொண்டதுடன் தம் மிடமே அக் குறிப்புக் கோப்பை வைத்துக் கொண்டு செயலாற்றி ஞர். நினைவு மறதி என்பது அவருடைய ஆட்சி எல்லையில் காணுத ஒன்று ஆயிற்று.

சமயப் பொதுமை :

மு.வ. வின் சமயம், பொதுமையின்பாற்பட்டது. ‘இராம திர்த்தரிடமும் தாயுமானவரிடமும் படிந்து, திருவள்ளுவரைப்

பெ. மு. வ.-10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/157&oldid=586230" இலிருந்து மீள்விக்கப்பட்டது