பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 - பெருந்தகை மு. வ.

பயின்று, திரு. வி. க. விடம் பழகி, காந்தியடிகளின் வழியை நினையும் மு.வ. எத்துறையில் இறங்கிலுைம் வேறு எப்படி இருக்க முடியும்?’ என்று விளு எழுப்புவது முழுமையான உண்மையாம். இதற்கொரு சீரிய சான்று பல்கலைக் கழகப்

புதுமனை புகுவிழாவின்போது கிடைத்தது.

புதுமனை புகுவிழா மிக எளிமையாகக் கொண்டாடத் திட்ட மிட்டார் மு.வ. எப்படி? அவரே ஒரு குத்துவிளக்கில் திரிகளை ஏற்றினர்; சுடரவிட்டார்; திருக்குறள் கடவுள் வாழ்த்து அதி காரத்தைப் பாடினர்! விழாவைச் சுடரொளியுடனும், உலகப் பொது மறை வாழ்த்துடனும் முடித்தார்! எத்தகைய பொலிவு மிக்க-பொருள்மிக்க செய்தி. அம்மட்டோ? அலுவலர் அனை வருக்கும் தாம் எழுதிய திருக்குறள் தெளிவுரை நூற் படியைத் தம் அன்பளிப்பாக வழங்கினர். பொதுப் பொருளை எவ்வாறு போற்றிச் செலவிட வேண்டும் என்பதைச் சொல்லாமல் சொல் லிக்காட்டிய நிகழ்ச்சியன்றாே இது !

பெரும் பொறுப்பில் இருப்பவர்களைப் பற்றிப் பிறர் அறிந் துள்ள செய்திகளைப் பார்க்கிலும் அவர்களை நிழல்போல் தொட ரும் அணுக்கர்களே மிகுதியும் அறிவர். நிறையும் குறையும் தெளிவாக அறிவர். அவ்வகையில் மு.வ. அவர்கள் பல்கலைக் கழகத் துணைவேந்தராகப் பணிபுரிந்த காலமெல்லாம் தனித் துணைவராக (P.A.) விளங்கிய திரு. ஆர். ஆர். சத்திய மூர்த்தி அவர்கள் குறிப்பிடும் கருத்துகள் அறிந்து மகிழத் தக்

கனவாம்.

அலுவலகத்தில் : *

‘டாக்டர் மு. வ. அவர்கள் தம்மைப் பார்க்க வருவோர்கள், காலை 9 முதல் 10 மணி வரை இல்லத்திலும், மாலை 3 முதல் 4 மணிவரை அலுவலகத்திலும் பார்க்கலாம் என்ற அறிவிப்புப் பலகையைப் பொருத்தச் செய்து அதன்படி பேட்டி கொடுத்து வந்தார். பகல் உணவுக்குப் பிறகு கடிதங்கட்குப் பதில் எழுது

1. பேராசிரியர் ம. ரா. போ. குருசாமி, பேராசிரியர் மு.வ.-பேரா சிரியர் அ. மு. ப. கருத்தரங்கக் கட்டுரைகள் பக். 33.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/158&oldid=586232" இலிருந்து மீள்விக்கப்பட்டது