பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணை வேந்தர் 147

வார். தம்மைப்பார்க்க வருவோரின் குறை நிறைகளைக் குறித்து வைத்துக் கொண்டு அதற்குரிய ஆணைகளைப் பிறப்பித்துவிடு வார். மாலை, வீடு திரும்புமுன்னுல் தம் பி.ஏ. (P. A.) வை அழைத்து அன்றைக்குச் செய்து முடித்த கடமைகளையும், செய் யாது விட்ட கடமைகளையும் எவை எனப் பிரித்துச் செய்யத் தவறிவிட்டவற்றை மறுநாள் செய்து முடிக்க வேண்டும் என்று நினைவுக் குறிப்பாக வரைய அவரைப் பணித்தருள் வார்.’

காலம் பொன்னுனது :

அவருடைய அலுவல் நேரம், காலை 11 மணி முதல் பிற் பகல் 1 மணி வரையிலும், மாலை 2-30 மணிமுதல் 5 மணி வரைக் கும் என ஒதுக்கிக் கொண்டார். பகல் உணவை அலுவலக அறையிலேயே முடித்துக் கொள்வார். அலுவல் நேரத்திலும் உணவு அருந்தும் நேரத்திலும் காலம் தவருமையைக் கடைப் பிடித்தார். பகல் 1 மணிக்கு உணவு. 1-30 முதல் 2-30 வரைக் கும் ஒய்வு. ஒய்வு என்றால் கண்ணயர்வது @6ుడి), சிந்தனைக் குரிய நேரம் அதுதான். இரவுதோறும் அவர் தூங்கும் நேரம் 6 மணி அளவுதான். அலுவலக நேரத்தில் வீணே நேரத்தைக் கழிக்காமல் ஒவ்வொரு மணித்துளியும் பொன்னனது என்று உணர்ந்து செயலாற்றுவார். பகலுணவிற்குப் பிறகு கழிக்கும் ஒய்வு நேரத்தில்தான் பல செய்திகளைப் பற்றிச் சிந்தித்து மனத்தளவில் செய்து குறிப்புகளை வரைவார். தம்கீழ்ப் பணி யாற்றும் அதிகாரிகட்கு என்னென்ன குறிப்பானைகள் பிறப் பிக்கப் படவேண்டுமோ அவையெல்லாம் அன்று மதியம் உடனே நடைபெறும்.’

பல்கலை நகருக்கு ஒரு தந்தை :

அதிகாலையிலும் மாலையிலும் பல்கலை நகர் முழுவதும் சுற்றிவருவார். அவர்தம் திருவடிகள் படாத இடம் பல்கலை நகரில் இல்லை எனலாம். தம் கண்காணிப்பில் வளரும் கட்ட டங்களையும் செடிகளையும் கண்டு பூரிப்பு அடைவதுடன் அவற் றின் வளர்ச்சிகளைக் குறித்துச் சம்பந்தப்பட்டோரிடம் எடுத்துக் கூறி வேண்டியன செய்யப் பணிப்பார். முன் அனுமதியின்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/159&oldid=586233" இலிருந்து மீள்விக்கப்பட்டது