பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணை வேந்தர் 149

வேண்டா என அமைந்தார். ஆளுல் தில்லி சாகித்திய அகா தெமியினர் தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதும் பணியை மு.வ. வினிடம் ஒப்படைத்து விட்டனர். ஆதலால் வேறு வழியின்றி அப் பணியை ஏற்றுக் கொண்டார். அந் நூல் 1972 ஆம் ஆண்டு வெளிவந்தது.

தமிழ் இலக்கிய வரலாற்றை மதிப்பதற்கரிய காணிக்கை’ என்று திரு. தெ. பொ. மீனுட்சி சுந்தானுர் குறிப்பிடுவது நூல் நிலையைத் தெளிவாக விளக்குகிறது. சாகித்திய அகாதெமியின் திட்டப்படி இந் நூல் மற்ற இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்படும் நிலை பெற்றது. ஆதலால் மற்றை மொழியினர் தத்தம் தாய்மொழி வழியே தமிழ்மொழியின் சிறப்பினை அறிந்து கொள்வதற்கு வாய்ப்பு உண்டாயிற்று.

தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், சங்க இலக்கியம், நீதி நூற் காலம், இரட்டைக் காப்பியங்கள், பக்திப் பாடல்கள், பலவகை நூல்கள், காப்பியங்கள், சமயநூல்கள், சதகம் முதலியன, பத்தொன்பதாம் நூற்றாண்டு, இஸ்லாமிய இலக்கியம், கிறிஸ்தவ இலக்கியம், வெளிநாட்டுத் தமிழ் இலக்கியம், நாடக இலக்கியம், கதை இலக்கியம், கட்டுரை, இக் காலப் பாட்டிலக்கியம் என்னும் பதினெட்டுத் தலைப்புகளில் 376 பக்க அளவில் தமிழ் இலக்கிய வரலாறு நடையிடுகின்றது.

நல்வாழ்வு :

‘பழைமை புதுமை இவற்றிடையே என்றும் பயன்தரவல்ல அடிப்படை நெறிகள் சில உள்ளன. அவற்றைப் போற்றினுல் வாழ்வில் அமைதியும் இன்பமும் வாய்ப்பதை ஒவ்வொருவரும் உணரலாம்’ என்பதை அறிவுறுத்தும் நோக்கில் எழுந்த நூல் நல்வாழ்வாகும். மு. வ. வின் நல்வாழ்வால் தமிழகம் பெற்ற இறுதி நூல் நல்வாழ்வு என்பதாகும்.

வழிபாடு, நம்பிக்கை, உடம்பைப் போற்றல், எளிமை ஓர் அறம், உரிமையும் கடமையும், புலனடக்கம், மனவலிமை வேண்டும், பண்பாடு, பொதுமை அறம், நீந்துக என்னும் பத் துக் கட்டுரைகளைக் கொண்டது நல்வாழ்வு என்னும் நூலாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/161&oldid=586236" இலிருந்து மீள்விக்கப்பட்டது