பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 பெருந்தகை மு. வ.

‘குறுகி நிற்பது மனத்தின் இயற்கை அன்று; பரந்த நோக்கம் கொண்டு உயர்வதே மனத்தின் இயற்கை அந்த இயற்கைத் தன்மையை உணர்ந்து வாழ்வது நீந்தக் கற்றுக் கொண்டு குளத்திலும் ஆற்றிலும் நீந்திச் செல்வது போன்றது. குடும்பத்திலும் உலகத்திலும் அவ்வாறு நீந்தி வாழவேண்டும். இல்லையேல் நீந்த அறியாமல் திக்குமுக்காடிச் சாகும் நிலையே வாழ்க்கையிலும் நேர்கிறது. நீந்துவோர்க்கும் நீந்த அறியாத வர்களுக்கும் கைகால்கள் ஒரே வகையாக அமைந்துள்ளன; மூச்சுப் பைகளும் மூளை முதலியவைகளும் ஒரே வகையாக அமைந்துள்ளன. வேறுபாடு என்ன? சில இயற்கை விதிகளை உணர்ந்து உடம்பும் மூளையும் நீரில் ஒத்துழைப்பதால் நீந்தக் கற்றவர் நீரில் மகிழ்ச்சி காண்கிறார்கள். அந்த இயற்கை விதி களின்படி உடம்பும் முளையும் நீரில் ஒத்து இயங்காமையால் நீந்த அறியாதவர் நீரில் திக்கு முக்காடி மூழ்குகிறார்கள். வாழ்க்கையில் உள்ள இயற்கை விதி மனம் பரந்து உயர்ந்து நிற்பதே ஆகும். அதை உணர்ந்து வாழ இயலாமையால் பலர் குறுகித் தாழ்ந்து துன்புறுகிறார்கள். நெறி தெளிந்து மனத்தை உயர்த்த வல்ல வர்கள் பிறவிக்கடல் நீந்துவோராய் வாழ்ந்து அமைதியும் இன்பமும் காண்கிறார்கள். அவர்களின் வாழ்வே மற்றவர்கள் பின்பற்றத் தக்க நல்வாழ்வு ஆகும்’ என்று முடிக்கும் மு. வ. வின் வாழ்வு பின்பற்றத்தக்க நல்வாழ்வு என்பதைத் தமிழ் உலகே நன்கு அறிந்து கொண்டுள்ளது அல்லவா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/162&oldid=586237" இலிருந்து மீள்விக்கப்பட்டது