பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. வெளிநாட்டுச் செலவுகள்

வெளிநாட்டுச் செலவுகள் அறிவை வளர்க்கும்; அனு பவத்தைப் பெருக்கும். தமிழ்ப் பெரியார் திரு. வி. க. அவர்கள் எழுதிய இலங்கைச் செலவு என்னும் நீண்டதொரு கட்டுரை, வெளிநாட்டுச் செலவின் பண்பையும் பயனையும் ஒருங்கே விளக்கும். இலக்கியச் சுவை கெழுமிய சிறந்த கட்டுரையாக இலங்கைச் செலவு அமைந்துள்ளது. அதனைக் கற்போர் இலங்கைக்குச் சென்றுவர வேண்டும் என்னும் ஆர்வத்தால் உந்தப்படுதல் உறுதி. எனவே மு. வ. தம் இளமைக் காலத்தே இலங்கைச் செலவைக் கற்று அதனைக் காணும் ஆர்வத்தைப் பெருக்கிக் கொண்டிருந்தார். கோவை கிழார் திரு. சி. எம். இராமச்சந்திரஞ் செட்டியார் எழுதிய கடலின்கண் முத்து’ என்னும் கட்டுரை இலங்கைச் செலவின் ஆர்வத்தை மேலும் பெருக்கியது. ஆகலின் 1950 ஆம் ஆண்டு சனவரித் திங்களில் இலங்கைச் செலவு மேற்கொண்டார். யான்கண்ட இலங்கை’ என்னும் நூலைப் பற்றிய குறிப்பில் சிலசெய்திகளை முன்னரே அறிந்துள்ளோம்.

மு. வ. வுடன் வாலாசாபாத் அப்பா திரு. மாசிலாமணி முதலியாரும், பேராசிரியர் அ. மு. பரமசிவானந்தம் அவர்களும் குடும்பத்துடன் சென்றிருந்தனர். கொழும்பு மேட்டுத்தெரு விவேகானந்த சபையில் தங்கியிருந்தனர். இலங்கைத் தமிழர்கள் வாழும் வெள்ளவத்தை, கண்டி, திருக்கோணமலை, கொழும்பு, யாழ்ப்பாணம் முதலிய இடங்களைக் கண்டனர். இக் காட்சிகளும் அனுபவங்களும் யான் கண்ட இலங்கை என்னும் நூலில் இடம் பெற்றுள்ளன. நாமே இலங்கைக்கு நேரில் சென்று கண்டாற் போன்ற சுவையை நூல் வழங்குகின்றது.

யாழ்ப்பாணத் தமிழர்:

‘யாழ்ப்பாணத்தில் மக்களின்-தமிழ் மக்களின்-அறிவு வளத்தைக் காணலாம்; அன்புப் பெருக்கைக் காணலாம்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/163&oldid=586238" இலிருந்து மீள்விக்கப்பட்டது